Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது லிஸ்டிலேயே இல்லையே.. ரோகித் சொன்ன மாஸ்டர் பிளான்.. கடைசி டெஸ்ட்டில் தரமான சவால் இருக்கு !

இந்தூர் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் என்பது 99% உறுதியாகிவிட்டது.

இது குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்டதற்கு அவர் லிஸ்டில் இல்லாத பல விஷயங்களை குறித்து அறிவித்துள்ளார்.

குறிப்பாக பார்டர் கவாஸ்கர் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆடுகளம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

எனினும் நாக்பூர் டெஸ்டில் இந்திய அணி அதுவும் சுழற் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்து 400 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா ஊடகங்கள் ஆடுகளம் குறித்து பேசிய பேச்சு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மா அடித்துள்ள பேட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து பேசிய அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் வகையில் அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி டெஸ்ட்டில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரிக்க அணி நிர்வாகம் கோரிக்கை விடுக்கும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

யோசிக்கலாம்

யோசிக்கலாம்

எனினும் இந்தூர் டெஸ்ட் போட்டியில் நாங்கள் நினைத்தபடி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த கோரிக்கை எழுப்பப்படும் என அவர் கூறியுள்ளார். ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் அணியில் இல்லை என்றும் அவருக்கு தற்போது திருமணம் நடைபெற்று இருப்பதால் அவர் எந்த அளவுக்கு கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறார் என்று தெரியவில்லை என்று கூறி ரோகித் சர்மா சிரித்தார். தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று விட்டால் வித்தியாசமாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

வெற்றி தேவை

வெற்றி தேவை

ஆனால் இன்னும் நாங்கள் கடைசி தடையை தாண்டவில்லை என்றும் ஒரு வெற்றியை பெற்று உறுதி செய்த பிறகு அது குறித்து யோசிக்கலாம் என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.இன்னும் இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு மாதம் ஐபிஎல் போட்டிகள் இடையில் இருப்பதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நாங்கள் இதுவரை யோசிக்கவில்லை என்று சுட்டிக் காட்டிய ரோகித் சர்மா இறுதிப் போட்டிக்கு முன் நிறைய நேரம் இருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்பில்லாத ஆடுகளம்

தொடர்பில்லாத ஆடுகளம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து பங்கேற்காது என்பது தெளிவாக தெரிவதாக குறிப்பிட்ட ரோகித் சர்மா இதனால் நாங்களும் ஆஸ்திரேலியாவும் மோத அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இரண்டு அணிகளுமே தங்களுக்கு தொடர்பு இல்லாத ஆடுகளத்தில் தான் விளையாட போகிறோம் என்றும் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

யாருக்கு சாதகம்

யாருக்கு சாதகம்

இதனால் யாருக்கும் சாதகமான சூழல் நிலவவில்லை என்று குறிப்பிட்ட ரோஹித் சர்மா, இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்தில் நிறைய போட்டிகளில் விளையாடி இருப்பதாக கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து ஆடுங்களில் நன்றாக விளையாடக் கூடும் என்பதை சுட்டிக்காட்டிய ரோகித் சர்மா, இரண்டு அணிகளுக்குமே அது வித்தியாசமான சூழலாக இருக்காது என்று கூறியுள்ளார். இரண்டு அணிகளுமே சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல போட்டியை கொடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, February 28, 2023, 17:00 [IST]
Other articles published on Feb 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+