Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவுண்டமணி செந்தில் போல் மாறிய ரோகித் , சமிரா .. மோசமான சாதனை படைத்த ரோகித்.. ரசிகர்கள் கிண்டல்

தர்மசாலா: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் ரோகித் சர்மா ஒரு மோசமான சாதனையை படைத்தார்.

திரைப்படங்களில் எப்படி கவுண்டமணியை கண்டால் செந்திலுக்கு ஆகாதோ, அதே போல் சமிராவை கண்டால் ரோகித் சர்மாவுக்கு ஒத்து வருவதில்லை.

உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களை எல்லாம் கதறவிடும் ரோகித் சர்மா, ஒரு சாதாரண வேகப்பந்துவீச்சாளரை கண்டு திணறி வருகிறார்.

6 முறை ஆட்டமிழப்பு

6 முறை ஆட்டமிழப்பு

சமீராவின் பவுலிங்கில் ரோகித் படு மோசமாக விளையாடி உள்ளார். இதுவரை ரோகித்திற்கு 30 பந்துகளை சமீரா வீசியுள்ளார். இந்த 30 பந்துகளுக்குள் 6 முறை ரோகித்தின் விக்கெட் பறிபோயுள்ளது. தோராயமாக 10 பந்துகள் கூட தாண்ட முடியாத சூழலில் இருக்கிறார். இது ரோகித்துக்கு மோசமான பெயரை பெற்று தந்துள்ளது.

ஒற்றை இலக்கம்

ஒற்றை இலக்கம்

இதே போன்று ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 முறை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். அதே ரோகித் சர்மா, தற்போது அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த 2வது வீரர் என்ற சோகமான பெருமையை பெற்றுள்ளார் ரோகித் சர்மா.

ஓய்வின்றி ரோகித்

ஓய்வின்றி ரோகித்

கடந்த 4 போட்டிகளில் ரோகித் சர்மா 3 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரன் குவிக்க வேண்டிய பொறுப்பு நடுவரிசை வீரர்கள் மீது விழுந்துவிடுகிறது. ரோகித் சர்மா ஓய்வே இன்றி விளையாடி வருவதும், கேப்டன்ஷியில் அதிக கவனம் செலுத்துவதால் அவரது பேட்டிங் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தற்போது மீண்டும் 3 நாட்களில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்கு வேறு தயராக வேண்டும். இத்னால் ரோகித்துக்கு ஓய்வே கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சவாலை அவர் எப்படி எதிர்கொள்வார், எப்படி அவர் சவால்களை சமாளிப்பார் என்று அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Sunday, February 27, 2022, 22:58 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+