For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சபாஷ்..!! ஒரு போட்டி.. 2 சாதனைகள்..!! சச்சின், தோனியை காலி செய்த ரோகித் #INDvsPAK

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | மெய் சிலிர்க்க வைத்த ரோகித் ஷர்மா

மான்செஸ்டர்: உலக கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் அபாரமாக விளையாடிய ரோகித், சச்சின், தோனி சாதனையை காலி செய்து அசத்தி இருக்கிறார்.

உலகக் கோப்பை தொடரின் 22வது லீக் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

டாஸ் வென்ற பாக். கேப்டன் சர்பிராஸ் அகமது பவுலிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ராகுல் களமிறங்கினர். தவான் இல்லாத தொடக்கம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். உலக கோப்பை தொடரில் முதன் முதலாக தொடக்க வீரராக களமிறங்கியதால் ராகுல் நிதானமாக ஆடினார்.

அதிரடி, நிதானம்

அதிரடி, நிதானம்

மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ராகுலின் பதற்றத்தை தணித்தார். ராகுல் நிதனமாக விளையாட மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக ஆட அணியின் ரன் சீராக உயர்ந்தது.

ரோகித் 140

ரோகித் 140

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ரோகித் 113 பந்துகளில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரி விளாசி 140 ரன்கள் குவித்தார். போட்டியில் 3 சிக்சர் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் சிக்சர் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சிக்சரில் சாதனை

சிக்சரில் சாதனை

இந்திய வீரர்களில் சர்வதேச கிரிக்கெட்டில் தோனியும், ரோகித்தும் 355 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் இருந்தனர். தற்போது, ரோகித் 358 சிக்சர்கள் விளாசி தோனியை பின்னுக்கு தள்ளி உள்ளார்.

24 சதங்களில் சாதனை

24 சதங்களில் சாதனை

மேலும் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்களில் சச்சின் சாதனையையும் ரோகித் முறியடித்துள்ளார். சச்சின் 219 போட்டிகளில் 24 சதம் அடித்தார். ஆனால், ரோகித் 203 போட்டிகளில் 24 சதம் அடித்து சச்சினை முந்தியுள்ளார்.

யார்? யார்?

யார்? யார்?

அதாவது, குறைந்த போட்டிகளில் 24 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, 142 போட்டிகளில் விளையாடி முதலிடம் பிடித்துள்ளார். 161 போட்டிகளில் கோலி, 192 போட்டிகளில் டி வில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர்.

Story first published: Sunday, June 16, 2019, 20:35 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
Rohit sharma breaks sachin and dhoni record in one match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X