Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டான் பிராட்மேனுக்கு பிறகு ரோகித் சர்மா தான்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை.. பாராட்டு

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா இன்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஜடேஜா மற்றும் அஸ்வினின் சுழலில் சிக்கி 177 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

ஆனால் அதே ஆடுகளத்தில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலே 12 ரன்கள் விளாசினார்.

 இந்திய அணி அபாரம்

இந்திய அணி அபாரம்

ரோகித் சர்மாவை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் எடுத்த முயற்சி ஏதும் பலன் அளிக்கவில்லை. அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் எட்டு பவுண்டர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும். பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்து, நாதன் லயன் முர்பி ஆகியோர்களின் பந்துவீச்சை ரோகித் சர்மா அபாரமாக எதிர்கொண்டார். முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 77 ரன்கள் அடித்திருந்தது.

ரோகித் 56

ரோகித் 56

இதில் ரோகித் சர்மாவின் ஸ்கோர் மட்டும் 56 ஆகும். வழக்கம்போல் கே எல் ராகுல் 71 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். தற்போது ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி 100 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கிறது. கைவசம் ஒன்பது விக்கெட்டுகள் இருப்பதால் நாளை ஒரு நாள் முழுவதும் பேட்டிங் செய்து கூடுதலாக 250 ரன்கள் சேர்த்தால் அது இந்திய அணிக்கு பெரிய சாதகமாக அமையும்.

இரண்டாவது இடம்

இரண்டாவது இடம்

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மார்க் வாக் ,ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணியிடமிருந்து போட்டியை கவர்ந்து சென்று விட்டதாக கூறியுள்ளார். மேலும் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மன் 98.2 சராசரி உடன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ரோகித் சர்மா 74.7 என்ற சராசரி உடன் உள்ளார்.

தொடர்ந்து விளையாடுங்கள்

தொடர்ந்து விளையாடுங்கள்

இதேபோன்று தொடக்க வீரராக ரோகித் சர்மாவின் டெஸ்ட் சராசரி 57.42 என்ற அளவில் இருக்கிறது. ரோகித் சர்மா பெரிய இன்னிங்ஸ் ஆடினால் அது இந்தியாவுக்கு பெரும் சாதகமாக அமையும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கூறியிருக்கிறார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடி ரன்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, February 9, 2023, 23:10 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+