Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடி தூள்.. உலக சாதனை படைத்த ரோகித் சர்மா.. டி20 போட்டியில் இனி புதிய கிங் ரோகித்

லக்னோ: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் திணறிய இஷான் கிஷன் இலங்கைக்கு எதிராக தனது வழக்கமான ஷாட்களை ஆடி ரன்களை குவித்தார். இதன் மூலம் இந்திய அணி பவர்பிளே முடிவில் 58 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். பெரிய இலக்கை நிர்ணயிக்கும் முயற்சியில் இந்த ஜோடி இருந்தனர்.

நம்பர் 1 வீரர்

நம்பர் 1 வீரர்

ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் 37 ரன்களை கடந்ததன் மூலம் , சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். . இதன் மூலம் நியூசிலாந்து வீரர் குப்தில் 3299 ரன்கள் விராட் கோலி 3296 ரன்கள் ஆகியோர் ரோகித் சர்மா பின்னுக்கு தள்ளினார். இந்த ஆட்டத்தில் ரோகித் 44 ரன்கள் அடித்தன் மூலம் 3307ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார்.

 அருமையான வாய்ப்பு

அருமையான வாய்ப்பு

விராட் கோலி, இந்த தொடரில் விளையாட வில்லை. குப்திலுக்கும் தற்போது எந்த டி20 போட்டியும் இல்லை. இதனால் இலங்கைக்கு எதிரான 3 போட்டியில் ரோகித் சர்மா அதிக ரன்களை குவித்தால் இன்னும் சில நாட்களுக்கு ரோகித் சர்மாவின் சாதனையை யாரும் உடைக்க முடியாத நிலை ஏற்படும்.

Recommended Video

எனக்கு சுத்தமா புடிக்கல.. வீரர்களின் காயம் குறித்து Rohit Sharma அதிருப்தி
ரோகித் மிஷின்

ரோகித் மிஷின்

இலங்கைக்கு எதிராக இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 289 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இதில் 1 சதம் அடங்கும். ஆனால் சராசரி வேறும் 22.76 ரன்கள் தான். இதனை அதிகரிக்கும் கட்டாயத்தில் ரோகித் சர்மா உள்ளார். இதனால் நடப்பு தொடர் அவருக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

Story first published: Friday, February 25, 2022, 0:56 [IST]
Other articles published on Feb 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+