Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எப்படி இருந்த மனுஷன்”.. இந்தியாவின் தோல்விக்கு பின் ரோகித் சர்மா செய்த விஷயம்.. ரசிகர்கள் மனவேதனை!

அடிலெய்ட்: இங்கிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த சூழலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மனவேதனையில் அழுதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே 170 ரன்களை குவித்தது.

இந்திய இன்னிங்ஸ்

இந்திய இன்னிங்ஸ்

லீக் சுற்றுகளில் கலக்கிய இந்திய அணி இன்று பேட்டிங்கில் சற்று ஏமாற்றியது. ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா 27 ரன்களுக்கும், கே.எல்.ராகுல் 5 ரன்களுக்கும் வெளியேறி ஏமாற்றினர். இதன்பின்னர் வந்த நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி (50) - ஹர்திக் பாண்ட்யா (63) ஜோடி ரன்களை விளாசி சவாலான இலக்கை நிர்ணயித்தது.

படுதோல்வி

படுதோல்வி

இதனைத்தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு எவ்வித தாக்கத்தையும் இந்திய பவுலர்களால் ஏற்படுத்த முடியவில்லை. ஓப்பனிங் வீரர்கள் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவருமே ஆட்டத்தை முடித்தனர். பட்லர் 49 பந்துகளில் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 86 ரன்களையும் குவித்து அசத்தினர். லீக் சுற்றில் சிறப்பாக வீசிய ஒரு பவுலரால் கூட விக்கெட் எடுக்க முடியவில்லை.

சோகமான சம்பவம்

சோகமான சம்பவம்

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆட்டம் முடிந்த பிறகு பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் கைக்கொடுத்த ரோகித், நேராக டக் அவுட்டிற்கு சென்று அமர்ந்துவிட்டார். அங்கு நீண்ட நேரம் தலைகுனிந்தபடி இருந்த அவர் மனம்வேதனையில் அழுத காட்சிகள் வெளியாகியுள்ளன.

அடுத்த உலகக்கோப்பை

அடுத்த உலகக்கோப்பை

ஐபிஎல்-ல் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரோகித், அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு ஆடுவாரா என்பது சந்தேகம் தான். எனவே அருகில் வந்து கோப்பையை இழந்துவிட்டோம் என்ற அதிருப்தியில் கண்கலங்கினார். இதனை பார்த்த இந்திய அணி ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, November 10, 2022, 18:33 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+