Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நான் அத செய்யலனா; அவ்வளோதான்” வங்கதேசத்திடம் ஆட்டம் கண்ட இந்தியா.. எப்படி மீண்டது.. ரோகித் பதில்!

அடிலெய்ட்: வங்கதேச அணியுடனான போட்டியில் பதற்றமான சூழலையும் எப்படி கட்டுப்படுத்தி வெற்றி பெற்றோம் என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

அட்டகாச பேட்டிங்

அட்டகாச பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சில வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்ற வீரர்கள் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் (50), விராட் கோலி (64), சூர்யகுமார் யாதவ் (30) என சிறப்பாக ஆடினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்களை அடித்துள்ளது.

கடைசி ஓவரில் த்ரில்

கடைசி ஓவரில் த்ரில்

இதன்பின்னர் ஆடிய வங்கதேச அணிக்கு மழையின் காரணமாக 16 ஓவர்களில் 151 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் லிண்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்களை குவிக்க, மற்ற வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்களை குவித்தனர். இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதிலும் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்க, வங்கதேச அணி 145/6 ரன்களை மட்டுமே குவித்தது.

ரோகித் சர்மா பேச்சு

ரோகித் சர்மா பேச்சு

இந்நிலையில் இந்த பதற்றமான போட்டி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசினார். அதில், நான் மிகவும் அமைதியாகவும் இருந்தேன், அதே சமயம் பெரும் பதற்றமும் எனக்குள் இருந்தது. ஆனால் ஒரு அணியாக நிதானமாக இருந்தால் தான் திட்டத்தை செயல்படுத்த முடியும். இல்லையென்றால் சொதப்பிவிடும். பாதி ஆட்டம் வரை 10 விக்கெட்களும் அப்படியே இருந்தது ஆட்டத்தை எப்படி வேண்டுமானாலும் கொண்டு சென்றிருக்கும். ஆனால் 2வது பாதியில் சிறப்பாக விக்கெட்களை அள்ளினோம்.

கோலி இருப்பார்

கோலி இருப்பார்

விராட் கோலி எங்களுக்காக எப்போதுமே இருக்கிறார். உலகக்கோப்பையில் அவர் ஆடும் விதம் ஆச்சரியத்தை கொடுக்கிறது. இதே போல கே.எல்.ராகுலும் இன்று சிறப்பாக ஆடியுள்ளார். அவர் எப்படிபட்ட வீரர் என எங்களுக்கு தெரியும். அவர் நன்றாக ஆடினால் ஆட்டத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்வார். கடந்த போட்டியில் நாங்கள் சரிவர ஃபீல்டிங் செய்யவில்லை. ஆனால் இன்று மிகச்சிறப்பாக கேட்ச்களை பிடித்தோம். அதுவும் அழுத்தமான சூழலில் பிடிப்பது சாதாரணம் அல்ல. என் அணி மீது என்றுமே எனக்கு நம்பிக்கை குறையாது என ரோகித் சர்மா பேசியுள்ளார்.

Story first published: Wednesday, November 2, 2022, 19:03 [IST]
Other articles published on Nov 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+