Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9 மாத ப்ளான் இன்று தான் நடந்தது.. கடைசி ஓவரில் முகமது ஷமி வீசாதது ஏன்? ரோகித் சர்மா விளக்கம்!

அடிலெய்ட்: வங்கதேச அணியுடனான கடைசி ஓவரில் முகமது ஷமி ஏன் புறகணிக்கப்பட்டார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேச அணியை கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 184/6 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வங்கதேசத்திற்கு மழையின் காரணமாக 16 ஓவர்களி 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 145 ரன்களை மட்டுமே எடுத்து வங்கதேசம் தோற்றது,.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்த போட்டியில் கடினமான இலக்கை நிர்ணயித்த போதும், இந்திய அணி தோல்வி பெற்றுவிடுமோ என்ற அச்சம் உருவானது. வங்கதேசத்தின் ஓப்பனர்கள் வலுவான அடித்தளம் அமைத்துவிட்டதால், 6 விக்கெட்கள் இழந்த போதும் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. களத்தில் விக்கெட் கீப்பர் நூருல் ஹாசன் மற்றும் டஸ்கின் அகமது நல்ல ஃபார்மில் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவர் பதற்றம்

கடைசி ஓவர் பதற்றம்

அப்போது கடைசி ஓவர் ஷமி வீசப்போகிறாரா அல்லது அர்ஷ்தீப் சிங் வீசப்போகிறாரா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சீனியர் வீரர் முகமது ஷமியை புறகணித்துவிட்டு, அர்ஷ்தீப் சிங்கிடம் ஓவர் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரில் சிக்ஸர் பவுண்டரி என பரபரப்பாக சென்ற போதும் 14 ரன்கள் மட்டுமே வந்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி கண்டது.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் ஷமிக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என ரோகித் விளக்கம் அளித்துள்ளார். அதில், முகமது ஷமியா? அர்ஷ்தீப்பா? என்ற குழப்பம் இருந்தது தான். ஆனால் நான் அர்ஷ்தீப் சிங் மீது நம்பிக்கை வைத்தேன். ஏனென்றால் எதிர்வரும் டி20 போட்டிகளிலும் உதவக்கூடியவருக்கு இந்த சவாலை கொடுக்க நினைத்தேன். இது ஏற்கனவே பேசி வைத்த ஒன்று தான்.

பும்ராவின் இடம்

பும்ராவின் இடம்

ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் அர்ஷ்தீப் சிங் தான் வீச வேண்டும் என ஏற்கனவே தயாராக இருக்கும்படி கூறியிருந்தோம். ஒரு இளம் வீரர் இதனை செய்வது சுலபம் கிடையாது. ஆனால் கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிங் இதனை செய்து வருகிறார். இனியும் அவர் தொடர்ந்து அதனை செய்வார் என கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்தார்.

Story first published: Wednesday, November 2, 2022, 21:40 [IST]
Other articles published on Nov 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+