Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் செய்த அலட்சிய கேப்டன்சி.. 7 ரன்கள் தேவையில்லாம போச்சு.. இதை கூடவா பார்க்க மாட்டாங்க

சென்னை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்த சிறு அலட்சியத்தால் தேவையில்லாமல் 7 ரன்கள் போனது.

கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு ரன் கூட மிகவும் முக்கியம் தான். அதற்காக தான் பவுண்டரி போனதா இல்லையா என்பதை நடுவர்கள் அதிக நேரம் எடுத்து கொண்டு பார்ப்பார்கள்.

நோ பால், வெயிட் ஆகியவை கூட அதிகமாக கொடுத்தால் அது வெற்றியை பாதிக்கும்.அதுவும் தொய்வான ஆடுகளத்தில் பந்து பழையதாக மாறினால் ஒரு ரன் எடுக்கவே பாடாத பாடு பட வேண்டும்.

குறைந்த ரன் வேகம்

குறைந்த ரன் வேகம்

இன்றைய ஆடுகளம் கொஞ்சம் கூட வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட வில்லை. இதன் காரணமாக முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் எல்லாம் ஸ்டம்பை அதிகளவு நோக்கி பந்துவீசினார்கள். இந்த தருணத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்த உடன் ஆஸ்திரேலிய அணியின் ரன் அடிக்கும் வேகம் குறைந்தது.

நோ பால்

நோ பால்

இந்த நிலையில் ஆட்டத்தின் 34.5வது ஓவரில் அக்சர் பட்டேல் பந்துவீசும் போது, நடுவர் உடனே நோ பால் கொடுத்தார். அக்சர் பட்டேல் கோட்டிற்கு உள்ளே வைத்து சரியாக பந்துவீசிய நிலையில் ஏன் நோ பால் வழங்கப்பட்டது என்று வீரர்களே குழப்பம் அடைந்தனர்.

ரோகித் தவறு

ரோகித் தவறு

உடனே அப்போது தான் தெரிந்தது. பவுண்டரி லைனில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. அதற்காக தான் நோ பால் வழங்கப்பட்டது. பொதுவாக முதல் 10 ஓவருக்கு பிறகு, 40வது ஓவர் வரை பவுண்டரி லைனில் 4 ஃபீல்டர்கள் தான் நிற்க வைக்கப்பட வேண்டும்.

சிக்சர்

சிக்சர்

அப்படி கூடுதலாக நிற்க வைக்கப்பட்டதால் அது நோ பாலாகும். இதனை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கெரி தூக்கி சிக்சர் அடித்து அசத்தினார். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் அலட்சியத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 7 ரன்கள் கிடைத்தது. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்து என்பதை பொறுத்தி இருந்த தான் பார்க்க வேண்டும்.

Story first published: Wednesday, March 22, 2023, 18:18 [IST]
Other articles published on Mar 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+