Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியுடன் மனக்கசப்பு?.. கேப்டன்சி சர்ச்சை.. முதல் முறையாக வாய்திறந்த ரோகித் சர்மா.. முழு விவரம்!

மும்பை: கேப்டன்சி சர்ச்சைகள் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் முறையாக பதில் கொடுத்துள்ளார்.

இந்திய அணியில் கடந்த சில நாட்களாகவே விராட் கோலியால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கு காரணம் கேப்டன்சி பிரச்சினை தான்.

டி20 அணியின் கேப்டன்சியில் இருந்து தானாக வெளியேறிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ-யால் நீக்கப்பட்டார்.

 கேப்டன்சி சர்ச்சை

கேப்டன்சி சர்ச்சை

விராட் கோலி பதவி விலகிய போது முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதில், இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை வழிநடத்துவதில் முழு கவனம் செலுத்துவேன் எனக்கூறினார். ஆனால் அதற்கு மாறான முடிவை தான் பிசிசிஐ எடுத்தது. ஒருநாள் அணிக்கும் ரோகித் சர்மாவை நியமித்தது. இதனால் விராட் கோலி அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. மேலும் ரசிகர்களுடம் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

 மனம் திறந்த ரோகித்

மனம் திறந்த ரோகித்

இந்நிலையில் கேப்டன்சி சர்ச்சை குறித்து ரோகித் சர்மா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், இந்திய அணிக்காக நாம் கிரிக்கெட் விளையாடும் போது, அதிகப்படியான அழுத்தங்கள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்கள் நல்லபடியாகவும் வரலாம் அல்லது மோசமாகவும் வரலாம். அனால் என்னை பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் வீரர் தனது முழு கவனத்தையும் ஆட்டத்தின் மீது தான் செலுத்த வேண்டும்.

முதன்மை விஷயம்

முதன்மை விஷயம்

ஆட்டத்தில் கவனத்தை செலுத்தவதை விடுத்து மக்கள் கூறும் கருத்துக்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவற்றை எப்போதுமே நிறுத்த முடியாது.

இதனை நான் ஏற்கனவே பல முறை கூறியுள்ளேன். தற்போது உள்ள சர்ச்சைகளுக்கும் இதையே தான் சொல்ல விரும்புகிறேன்.

Recommended Video

Team India new captain Rohit Sharma says virat kohli is still a leader of the team | Oneindia Tamil
அழுத்தம் ஏற்படலாம்.

அழுத்தம் ஏற்படலாம்.

இந்திய அணியின் வீரர்களுக்கும் இதையே தான் நான் கூற விரும்புகிறேன். பெரும் தொடர்களில் விளையாடும் போது, அதிக அழுத்தங்கள் ஏற்படலாம். பலரும் பலவிதமாக கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். எங்களுக்குள் நாங்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். நமது கைகளில் என்ன இருக்கின்றதோ, அதனை வைத்து எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றி தான் நினைக்க வேண்டும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து விராட் கோலி இதுவரை வாய்த்திறக்கவில்லை

Story first published: Monday, December 13, 2021, 20:10 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+