Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் கழுத்தை நெறித்த ரோகித்.. ஏன்பா இவ்வளவு கோபம்..முதல் டி20ல் நடந்த சுவாரஸ்யம்- வீடியோ

மொஹாலி: தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்துக்கொண்டு ரோகித் சர்மா திட்டிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்களை விளாசினார். இமாலய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 211 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்வியையே நம்ப முடியாத ரசிகர்களுக்கு, ரோகித் சர்மாவின் கடும் கோபத்தையும் காண முடிந்தது.

தவறான டி.ஆர்.எஸ்

தவறான டி.ஆர்.எஸ்

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் போது, யுவேந்திர சாஹல் வீசிய பந்தில், அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் எல்.பி.டபள்யூ ஆனார். ஆனால் பவுலரும், விக்கெட் கீப்பரும் எந்தவித அவுட்டும் கேட்கவே இல்லை. இதனால் ரோகித்தும் அமைதியாக இருந்துவிட்டார். பின்னர் திரையில் அது அவுட்டென காட்டப்பட்டதை பார்த்த ரோகித் சற்று அதிருப்தியடைந்தார். எனினும் இதே விஷயம் மீண்டும் நடந்தது.

ரோகித்தின் செயல்

ரோகித்தின் செயல்

ஆட்டத்தின் 11.6 ஓவரின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்தில் மேக்ஸ்வெல் எட்ஜாகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். பந்து பேட்டில் பட்ட சத்தம் அனைவருக்கும் கேட்டு அவுட் கேட்ட போதும், தினேஷ் கார்த்திக் அமைதியாக இருந்தார். இதனால் கோபமடைந்த ரோகித், தினேஷ் கார்த்திக்கின் கழுத்தை நெறித்துக்கொண்டு " ஒழுங்கா ரிவ்யூவ் கேட்க மாட்டீயா" என கேட்டார்.

உண்மை நிலை

எனினும் ரோகித் சர்மா இதனை நிஜமான கோபத்துடன் செய்யவில்லை. விளையாட்டாக தான் செய்வது போன்று இருந்தது. இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வீ டியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்திய அணியின் மூத்த வீரர்கள் இருவரும் இவ்வளவு ஜாலியாக விளையாடியது ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.

Story first published: Wednesday, September 21, 2022, 15:26 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+