நான் சொல்றதை கேளு.. எடுக்க வேண்டாம்.. ரோஹித் கொடுத்த வாய்ஸ்.. அப்படியே அடங்கிய கோலி.. வைரல்!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய கேப்டன் கோலிக்கு ரோஹித் கொடுத்த அறிவுரை சரியான சமயத்தில் கை கொடுத்தது.
இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்டிங்கில் திணறி வருகிறது. இங்கிலாந்து அணி 4 விக்கெட்டை இழந்து 39 ரன்கள் எடுத்துள்ளது.
2வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இந்தியா ஆல் அவுட் ஆகியுள்ளது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது.

அக்சர் பட்டேல்
இந்த நிலையில் இந்த போட்டியில் அக்சர் பட்டேல் வீசிய 11 ஓவரின் கடைசி பந்தில் டேனியல் லாரன்ஸ் பேட்டிங் பிடித்தார். இந்த பந்து வந்த லைனை கணிக்க முடியாமல் லாரன்ஸ் குழம்பி போனார். இதனால் பந்து பேடில் பட்டது.

டிஆர்எஸ்
இதை பார்த்துவிட்டு அக்சர் பட்டேல் விக்கெட் என்று நினைத்தார். இதனால் டிஆர்எஸ் எடுக்கும்படி கோலியிடம் அக்சர் பட்டேல் கூறினார். இதனால் டிஆர்எஸ் எடுக்கலாமா வேண்டாமா என்று கோலி குழம்பி போனார். என்ன செய்வது என்று தெரியாமல் கோலி மற்றும் அக்சர் பட்டேல் குழப்பத்தில் இருந்தனர்.

ரோஹித் சர்மா
இந்த நிலையில் குறுக்கே வந்த ரோஹித் சர்மா, இதில் ரிவ்யூ எடுக்க வேண்டாம். பந்து ஸ்டம்பிற்கு மிக அருகில் செல்லும். பந்து ஸ்டம்பை மோதினாலும் விக்கெட் இருக்காது. இது அம்பயர்ஸ் கால் போல இருக்கும் என்று கூறினார்.

கேட்டார்
இதை கேட்டுக்கொண்ட கோலி ரிவ்யூ எடுக்காமல் தவிர்த்தார். அதன்பின் ரிப்ளேவில் இது விக்கெட் இல்லை என்று உறுதியானது. டிஆர்எஸ் எடுத்து இருந்தால் இது அம்பயர்ஸ் கால் ஆக இருக்கும். கோலிக்கு ரோஹித் கொடுத்த அறிவுரை சரியான சமயத்தில் கை கொடுத்தது.


Click it and Unblock the Notifications