Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தவறு நடந்தாலும், அதை மாற்றவே மாட்டேன்”.. இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல்.. ரோகித் சர்மா தடாலடி

செயிண்ட் கிட்ஸ்: இந்தியாவின் பேட்டிங் திட்டம் தவறாக சென்ற போதும், அதையே தான் மீண்டும் செய்வேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Recommended Video

IND vs WI இந்தியா அதிரடியா தான் விளையாடும் - Rohit Sharma

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற சூழலில் 2வது டி20 போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.

தோல்வி

தோல்வி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவர்களில் இந்திய அணி 138 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 141/ ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ஆக்ரோஷமான பேட்டிங் முறையே காரணமாக பார்க்கப்படுகிறது.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

பந்துவீச்சாளர்களுக்கு பிட்ச் சாதகமாக உள்ளது என்று தெரிந்தும், முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட வேண்டும் என ரோகித் திட்டமிட்டார். அதன்படி அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் நினைக்க, சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினர். இதனால் இனியாவது பிட்ச்-ன் தன்மையை உணர்ந்து அதிரடி காட்ட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் இதற்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார். அதில், எங்கள் பேட்டிங்கில் சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு மாற்ற வேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் கையில் எடுத்துள்ள அதிரடி பேட்டிங் முறையை மாற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதில் நாங்கள் எதாவது சாதிக்க விரும்புகிறோம்.

தடலாடி விளக்கம்

தடலாடி விளக்கம்

ஒரே ஒரு தோல்வி மட்டுமே வந்துள்ளது. அதனை கண்டு எந்தவித பதற்றமும் கொள்ளக்கூடாது. அணி வீரர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாக கூறிக்கொள்கிறேன். ஒரே ஒரு தோல்வியை பார்த்து நாம் எதையும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அதே முனைப்புடன் அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும் என தடாலடியாக கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 2, 2022, 16:29 [IST]
Other articles published on Aug 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+