யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. 2வது டி20க்கான ப்ளேயிங் 11ல் புது வீரர்.. இந்திய அணி பவுலிங்!
செயிண்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டை கொடுத்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரண் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஒத்திவைக்கப்பட்ட போட்டி
இரவு 8 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த போட்டியானது, 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வீரர்களின் அனைத்து உடமைகளும் ட்ரினிடாட்டில் இருந்து செயிண்ட் கிட்ஸுக்கு கொண்டு வருவதற்கு தாமதமானதால், ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் இதில் இந்தியாவின் வெற்றியை காண ரசிகர்கள் காத்துள்ளனர்.

ப்ளேயிங் 11 ட்விஸ்ட்
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரே ஒரு முக்கிய மாற்றமாக ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆல்ரவுண்டர் தீபக் ஹூடாவுக்கு டிராவிட் வாய்ப்பு பெறுவார் என்று தான் கூறப்பட்டது. ஆனால் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் யாரும் எதிர்பார்க்காத மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள் குழப்பம்
அதாவது 3வது சுழற்பந்துவீச்சாளராக ப்ளேயிங் 11ல் இருந்து ரவி பிஷ்னாய் நீக்கப்பட்டு, வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். போட்டி நடைபெறும் வார்னர் பார்க் மைதானத்தில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் போதிலும் கூடுதலாக வேகப்பந்துவீச்சாளரை ரோகித் களமிறக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்
ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்


Click it and Unblock the Notifications