
அணி மாற்றங்கள்
இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓப்பனிங்கில் ரோகித் சர்மாவுடன் வழக்கம் போல சுப்மன் கில் களமிறங்குகிறார். 3வது வீரராக விராட் கோலி ஆடவுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாகவும், கே.எல்.ராகுல் திருமணம் காரணமாகவும் ஓய்வில் உள்ளனர். எனவே இவர்கள் இருவருக்கும் மாற்றாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். லோயர் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா வழக்கம் போல பேட்டிங்கிற்கு பக்க பலமாய் இருக்கிறார்.

அட்டகாச ஆல்ரவுண்டர்கள்
அக்ஷர் பட்டேல் இல்லாததால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருக்கிறார். மற்றொரு ஸ்பின்னராக குல்தீப் யாதவ் இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத மற்றொரு சுவாரஸ்ய முடிவாக ஷர்துல் தாக்கூர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரை சேர்ப்பதற்காக வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஷர்துலுக்கு உறுதுணையாக முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் உள்ளனர்.

பலே திட்டம்
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும், ஃபீல்டிங்கும் மிகவும் பலமானதாக இருக்கும். இதற்கேற்றார் போல போட்டி நடைபெறும் மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கமாக உள்ளது. எனவே அதிக ஸ்கோரை அடித்தாக வேண்டும். இதற்காக தான் ஷர்துல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை கொண்டு வந்து அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரித்துள்ளனர்.

ப்ளேயிங் 11 விவரம்
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்


Click it and Unblock the Notifications