For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக் - ரிஷ்ப் பண்ட்.. தென்னாப்பிரிக்க தொடரில் யாருக்கு வாய்ப்பு? ரோகித் முக்கிய அப்டேட்

ஐதராபாத்: தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் விவகாரத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முக்கிய தகவலை கொடுத்துள்ளார்.

Recommended Video

India vs South Africa Series-ல் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் ?
Rohit sharma gives a Important Report about Dinesh karthik vs Rishabh pant

ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை இந்திய அணி 2 -1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது.

அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோதவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தான் தீவிரமடைந்துள்ளன.

இந்திய அணியில் உள்ள பெரும் குழப்பம் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் தான். ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக் மீது முழு நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட்-ஐ வெளியில் உட்கார வைத்தார். எனினும் தினேஷுக்கு பெரியளவில் பேட்டிங் வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தென்னாப்பிரிக்க தொடரில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், என்னைப்பொறுத்தவரை டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் - பண்ட் இருவருமே நிறைய போட்டிகளில் ஆடி தயாராக வேண்டும். குறிப்பாக தினேஷ் கார்த்திக் தயாராக போட்டிகள் தேவை. ஏனென்றால் அவருக்கு ஒரு சில பந்துகளே ஆடுவதற்கு கிடைக்கிறது.

தென்னாப்பிரிக்க தொடரில் என்ன செய்யப்போகிறோம் என தெரியவில்லை. தென்னாப்ப்ரிக்காவின் பவுலிங் லைன் அப்பை பார்ப்போம். அவர்களின் பவுலிங்கை பொறுத்து தான் பேட்டிங் வரிசையை முடிவு செய்வோம். அவர்கள் இருவரின் விஷயங்களில் மிகவும் யோசித்து தான் முடிவெடுக்கிறோம். இனி வரும் போட்டிகளிலும் சூழலை பொறுத்தே தேர்வு அமையும் எனக் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால் தினேஷ் கார்த்திக் தான் வாய்ப்பு பெறுவார் எனத் தெரிகிறது.

Story first published: Monday, September 26, 2022, 17:27 [IST]
Other articles published on Sep 26, 2022
English summary
Rohit sharma opens up about Dinesh karthik vs Rishabh pant ahead of south africa t20 series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+