Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை: “இரண்டு பேருமே முக்கியமாச்சே”.. இந்திய ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பம்.. திணறும் ரோகித்!

அமீரகம்: இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது.

Recommended Video

Asia Cup 2022: India ஏன் Win பண்ண முடியும்? | Aanee's Appeal

ஆசிய கோப்பை தொடர் நாளை முதல் ( ஆகஸ்ட் 27 ) ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக அமீரகம் சென்றடைந்துள்ள அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா தலைமையில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் பலமான பேட்டிங் படையுடன் சென்றுள்ளது. ஓப்பனிங்கில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர். மிடில் ஆர்டரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா என நல்ல ஃபார்மில் இருக்க கூடிய வீரர்கள் உள்ளனர்.

ஒரே ஒரு குழப்பம்

ஒரே ஒரு குழப்பம்

இந்நிலையில் லோயர் ஆர்டரில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. அதாவது 7வது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது தீபக் ஹூடா ஆகியோரில் யாரோ ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்துவிட்டால், இந்திய அணி வெறும் 5 பவுலர்களுடன் மட்டுமே களமிறங்க வேண்டியிருக்கும். அதிலும் ஒருவர் ஆல்ரவுண்டர் ஆவார்.

இருவருமே முக்கியம்

இருவருமே முக்கியம்

எனவே யாரோ ஒருவரை நீக்கியே ஆக வேண்டும். இந்திய அணியின் தவிர்க்க முடியாது ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்ததில் இருந்து ரோகித் வாய்ப்பு கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார். மற்றொரு புறம் தீபக் ஹூடா ஆல்ரவுண்டராக இந்திய அணிக்கு உதவுவார். அதிரடி ஃபார்மில் உள்ள ஹூடா பேட்டிங் ஆர்டரில் அனைத்து இடங்களிலும் பொருந்துகிறார். இதே போல பவுலிங்கிலும் உதவுவார்.

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

இப்படி இரண்டு வீரர்களுமே சிறப்பான நிலையில் உள்ளதால் யாருக்கு வாய்ப்பு தருவது என ரோகித் சர்மா குழப்பத்தில் இருக்கிறார். இந்தியா தனது முதல் போட்டியாக வரும ஆகஸ்ட் 28ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. மிகவும் முக்கியமான போட்டி என்பதால் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்குடன் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Friday, August 26, 2022, 10:23 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+