
என்ன காரணம்
டாஸில் தோல்வியடைந்தாலும் இந்திய அணிக்கு நற்செய்தி என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அடிலெய்ட் மைதானத்தில் ஏற்கனவே பழைய பிட்ச் தான் பயன்படுத்தப்படுவதால் மெதுவாக இருக்கும். இன்று நேரம் போக போக பிட்ச் அடிவாங்கி மிகவும் ஸ்லோ ஆகும் என்பதால் பந்து நின்று வரும். இதனால் பேட்ஸ்மேன்களால் அதிரடி காட்ட முடியாது. எனவே இங்கு முதலில் பேட்டிங் செய்த அணி தான் அதிகம் வெற்றி பெற்றிருக்கின்றன.

வல்லுநர்களின் கருத்து
இன்று பிட்ச்- குறித்து பேசிய வல்லுநர்களும் டாஸ் வென்றால் பேட்டிங்கை தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். ரோகித் சர்மாவும் அதனையே தான் கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் டாஸில் தோற்றாலும் இந்திய அணி கேட்ட விஷயம் கிடைத்துவிட்டது. இதனால் இன்று 180+ ரன்கள் இலக்கை நிர்ணயித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என கூறப்படுகிறது.

முக்கிய மாற்றங்கள்
லீக் சுற்றின் போது 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்ற இந்திய அணி பெரும்பாலும் ஒரே ப்ளேயிங் 11 -ஐ தான் பயன்படுத்தியது. ஆனால் இன்றைய போட்டியில் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து அணியில் நல்ல பவுன்சர்கள் வீசுவார்கள் என்பதால் அதனை சமாளிக்க இடதுகை பேட்ஸ்மேன் பண்ட் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

2வது காரணம்
ஓவல் மைதானத்தில் ஸ்ட்ரெய்ட் திசையை விட, இரு புறங்களிலும் தான் பவுண்டரி தூரங்கள் குறைவு. எனவே பண்ட் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் நன்கு வளைத்து சிக்ஸர் அடிக்க சுலபமாக இருக்கும். இதனால் தான் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், அக்ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்


Click it and Unblock the Notifications











