Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் பந்துவீச்சால் கவலை.. பேட்டிங் வரிசையிலும் மாற்றம்.. கேப்டன் ரோகித் சர்மா அதிரடி பேச்சு

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் எதிரான போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு, கேப்டன் ரோகித் சர்மாவை கவலை அடைய செய்துள்ளது.

Recommended Video

T20 World Cup தொடருக்கான இந்திய அணியில் 13 வீரர்கள் உறுதி? *Cricket

192 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு விளையாடிய ஹாங்காங் அணி, கடைசி 2 ஓவரில் மட்டும் 33 ரன்களை விளாசியது.

இதனால் கத்துக்குட்டி அணியான ஹாங்காங்கே இந்த காட்டு, காட்டியதால் இந்திய அணி வெற்றி பெற்றும், ரோகித் சர்மா விரக்தியில் தலையை அசைத்தார்.

பாராட்டு மழை

பாராட்டு மழை

இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, உண்மையிலேயே நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இந்த ஆடுகளத்தில் 192 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். சூர்யகுமார் யாதவின் இந்த இன்னிங்சை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. தொடர்ந்து இது போன்ற சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக அவர் வெளிப்படுத்துகிறார்.

கிரிக்கெட்டிலேயே இல்லை

கிரிக்கெட்டிலேயே இல்லை

சூர்யகுமார் யாதவ்க்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம். அதனால் தான் எப்போதும் அவர் எந்த பயமும் இன்றி விளையாடுகிறார். சூர்யகுமார் ஆடிய சில ஷாட்கள் எல்லாம் கிரிக்கெட் புத்தகத்தில் இல்லாதவை. டி20 கிரிக்கெட்டில் ஷாட் தேர்வு என்பது மிகவும் முக்கியம். அதனால் தான் சூர்யாவால் மைதானத்தில் நாலா பக்கமும் ரன்கள் அடிக்க முடிந்தது.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இந்திய அணியில் தற்போது யார் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட தயாராக இருக்க வேண்டும். இது குறித்து வீரர்களிடையே ஏற்கனவே பேசி விட்டோம். கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். சரியான போட்டியில், பேட்டிங் வரிசையில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது.

பந்துவீச்சால் கவலை

பந்துவீச்சால் கவலை

ஹாங்காங் எதிரான ஆட்டத்தில் எங்களுடைய பந்துவீச்சு சுமாரான அளவிலேயே இருந்தது. இன்னும் எங்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என்று ரோகித் சர்மா தனது விரக்தியை வெளிப்படுத்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஸ்தீப், ஆவேஷ் கான் என இருவரும் பந்துவீச்சில் சொதப்பியதால், அடுத்த போட்டியில் அதிரடி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, September 1, 2022, 10:23 [IST]
Other articles published on Sep 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+