For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேவையில்லாத குப்பை பேச்சு.. ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா.. என்ன நடந்தது ?

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நேரடியாகவே விமர்சித்து பேசி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணி வீரர்கள் அதீத நம்பிக்கையில் அலட்சியமாக இருந்ததால்தான் மூன்றாவது ஆட்டத்தில் தோல்வியை தழுவியதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

ரவி சாஸ்திரி விமர்சனம்

ரவி சாஸ்திரி விமர்சனம்

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை ரோகித் சர்மா சந்தித்தார். அப்போது ரவி சாஸ்திரியின் விமர்சனம் குறித்து ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா இரண்டு டெஸ்ட் போட்டியை வென்றால் வெளியே இருப்பவர்கள் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வார்கள்.

குப்பையில் போடுங்க

குப்பையில் போடுங்க

இந்த பேச்சு அனைத்தும் குப்பையில் போட வேண்டும். நீங்கள் எப்போதுமே உங்கள் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே நினைப்பீர்கள். வெறும் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டு அனைத்தையும் நிறுத்திக் கொள்ள யோசிக்க மாட்டீர்கள். எங்கள் அணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிலர் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக கூறி வருகிறார்கள். நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்பு என்ன பேசிக் கொள்கிறோம் என்று உங்களுக்கு தெரியுமா?

கடுமையாக விளையாடுகிறோம்

கடுமையாக விளையாடுகிறோம்

கடுமையாக விளையாட வேண்டும் என்ற ஒரு வார்த்தை மட்டுமே மனதுக்கு வருகிறது. எங்களுடைய எதிரணிக்கு கொஞ்சம் கூட நாங்கள் இடம் கொடுக்க யோசிக்கிறோம். நாங்கள் வெளிநாட்டில் சென்று விளையாடும்போது எதிரணி வீரர்கள் எங்களையும் அப்படி தான் எதிர்கொள்வார்கள். அதை தான் நாங்களும் செய்ய விரும்புகிறோம். நாங்கள் அதிக நம்பிக்கையுடன் அலட்சியமாக இருப்பதாக வெளியே இருக்கும் நபர்கள் நினைக்கிறார்கள் என்றால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

பதிலடி

பதிலடி

ரவி சாஸ்திரி ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவருக்கு வீரர்கள் எப்படி தயாராவோம்? என்ன பேசிக் கொள்வோம் என்று அனைத்தும் தெரியும். ஆனால் அப்படியும் அவர் இப்படி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அலட்சியமாகவும் அதிக நம்பிக்கையுடனும் இருக்கவில்லை. நாங்கள் இப்போதும் கடுமையாக தான் எதிர் அணியை கையாளுகிறோம் என்று ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Wednesday, March 8, 2023, 15:10 [IST]
Other articles published on Mar 8, 2023
English summary
Rohit sharma hit backs Ravi shastri comment as rubbish தேவையில்லாத குப்பை பேச்சு.. ரவி சாஸ்திரிக்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா.. என்ன நடந்தது ?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+