அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக வென்று சாதனை படைத்தது.
இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளை ஓயிட்வாஷ் செய்த ஒரே இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா பேசினார். அதில் நாங்கள் வீரர்களிடம் என்ன எதிர்பார்த்மோ அது கிடைத்தது.
பிரஷித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு இந்த தொடரில் முக்கிய பிளஸ் பாயிண்டாக பார்க்கிறேன். சாஹல் எங்கள் அணியின் முக்கிய வீரர், அவரும் சிறப்பாக பந்துவீசினார். இந்த தொடரில் ஓபனிங் பெரிதாக ஜொலிக்கவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்டேன்கள் தினறும் போது எல்லாம், நடுவரிசை வீரர்கள் ரன் அடித்து காப்பாற்றினர்.

விராட் கோலி ஃபார்ம் குறித்து அணி நிர்வாகத்துக்கு எந்த கவலையும் இல்லை. அவர் தென்னாப்பிரிக்க தொடரில் கூட நன்றாக விளையாடினார். கோலிக்கு எந்த சிக்கலும் இல்லை. விராட் கோலிக்கு நம்பிக்கை தேவைப்படுகிறதா என்று எழுப்பபட்ட கேள்விக்கு, நீங்க என்ன பேசுறீங்கனு தெரிஞ்சு தான் பேசுறீங்களா என்று காட்டமாக பதில் அளித்தார்.
அணிக்கு வெளியே பல கூச்சல்கள் இருந்தது. அந்த சத்தங்களை பற்றி எல்லாம் கவலையே இல்லை.நாங்கள் களத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று பதில் அளித்தார். வரும் 16ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர் கொல்கத்தாவில் தொடங்குகிறது.