அதிக சிக்சர்கள்…. அதிரடி அரைசதம்..!! சாதனையில் மிரட்டிய ரோகித்…!! அரண்ட பாகிஸ்தான்..!! #INDvsPAK
Recommended Video
மான்செஸ்டர்:சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய பேட்ஸ் மென் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா.
இந்தியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் டாஸ் வென்ற பாக். முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களாக இந்திய அணியில் இருந்து ராகுல், ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது. பேட்டிங் என்பதால் அதிக ரன்களை டார்கெட்டாக கொடுக்கலாம் என்பதால் ரசிகர்களும் குஷியாகி இருக்கின்றனர்.
முதல் ஓவரை வீசினார். களத்தில் விழுந்த பந்து நன்றாக எகிறியது. தவானுக்கு பதில் களம் இறங்கி இருக்கும் ராகுல் அதை லாவகமாக கையாண்டார். கடைசியில் அந்த ஓவர் மெய்டனானது. 2வது ஓவரை வீசினார் ஹசன் அலி. பவுண்டரி எடுத்து அசத்தினார் ரோகித். இருப்பினும், அமீர் பந்தில் அவர் தடுமாறியது பல பந்துகளில் நன்றாகவே தெரிந்தது.

சாதனை தந்த ஆறு
6வது ஓவரை வீசினார் ஹசன் அலி. முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் வந்தது. 4வது பந்தில் ஒரு பவுண்டரியை விளாசிய ரோகித், அதே ஓவரின் 6வது பந்தில் ஒரு புதிய சாதனையை செய்திருக்கிறார். அந்த பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ரோகித். இது அவரின் 356 சிக்சராகும்.

ரோகித் முதலிடம்
இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மென் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா. அதிக சிக்சர்கள் என்ற பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார் தல தோனி. அவர் அடித்திருப்பது 355 சிக்சர்கள். அவருக்கு அடுத்து சச்சின்... அவர் அடித்தது 264 சிக்சர்கள்.

பவுலிங் மாற்றம்
ராகுல், ரோகித் இருவரும் பவுலிங்கை அழகாக எடுத்துக் கொடுத்து ஆடியதால், பந்து வீச்சாளர்களை மாற்றினார் சர்பிராஸ். ஆனாலும், முதல் விக்கெட்டுக்கு இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் தரப்பில் செம ஹேப்பி. ஸ்கோர் 340 ரன்களை தாண்டும் என்று முழக்கமிட்டபடி உள்ளனர்.

சூப்பரான அரைசதம்
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரோகித், விரைவில் அரை சதத்தை எட்டி இருக்கிறார். மொத்தம் 34 பந்துகளில் அரைசதம அடித்திருக்கிறார். இந்த உலக கோப்பையில் 3 இன்னிங்சிலும் 50க்கும் அதிகமான ரன்களை அவர் கடந்திருக்கிறார். இந்த போட்டியிலும் அணியின் ரன் ரேட் 6 என்ற அளவில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications