For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகளவுல ரோகித் பெஸ்ட்... அவர் கொடுக்கற சவாலை சந்திக்க திட்டத்தோட தயாரா இருக்கோம்!

சிட்னி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்காத ரோகித் சர்மா அடுத்ததாக நடைபெறவுள்ள 2 போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

வரும் 7ம் தேதி சிட்னியில் துவங்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் சிட்னி புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் உலகளவில் சிறந்த வீரர்களில் ரோகித் சர்மா சிறப்பானவர் என்று தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியான், அவர் கொடுக்கும் சவாலை சந்திக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமநிலையில் அணிகள்

சமநிலையில் அணிகள்

இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையில் வரும் வியாழக்கிழமை 3வது போட்டி துவங்கவுள்ளது.

திணறிய ஆஸ்திரேலியா

திணறிய ஆஸ்திரேலியா

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் பௌலிங் அட்டாக்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதேபோல முதலில் ஆடப்பட்ட பகலிரவு போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தவிர்த்து பேட்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாகவே தனது திறமையை வெளிப்படுத்தியது.

சிறப்பான இந்தியாவின் வெற்றி

சிறப்பான இந்தியாவின் வெற்றி

குறிப்பாக இரண்டாவது போட்டியில் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் யாரும் இல்லாமலேயே சிறப்பான வெற்றியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளது. இந்நலையில் 3வது போட்டியில் தற்போது ரோகித் சர்மா இணையவுள்ள நிலையில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலை எதிர்கொள்ள தயார்

சவாலை எதிர்கொள்ள தயார்

இந்நிலையில் உலகளவில் ரோகித் சர்மா சிறப்பான வீரர் என்று பாராட்டு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் ஆப்-ஸ்பின்னர் நாதன் லியான், அதனால் ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக ரோகித் சர்மா இருப்பார் என்றும் ஆனால் அந்த சவாலை எதிர்கொள்ள விருப்பத்துடன் தாங்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, January 4, 2021, 15:31 [IST]
Other articles published on Jan 4, 2021
English summary
We love challenging ourself -Nathan Lyon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+