Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மாவுக்கு காயம்.. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விலகல்!!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் தகுதியை நிரூபிக்க வேண்டிய சோதனை மற்றும் லேசான பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி மட்டும் நடைபெற்றது.

காயம்

காயம்

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வலியால் துடித்த அவர் பயிற்சியை பாதியில் விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்ய அழைத்து சென்றனர். இதில் கை விரலில் காயம் ஏற்பட்டது உறுதியானதால், அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மாயங் அகர்வால்

மாயங் அகர்வால்

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக கருதப்படும் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்க தொடரில் இல்லை என்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. . ரோகித்துக்கு பதிலாக நியூசிலாந்து தொடரில் கலக்கிய மாயங் அகர்வால் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான வரலாறு

மோசமான வரலாறு

தென்னாப்பிரிக்க மண்ணில் ரோகித்தின் சராசரி 15 ரன்கள் என்ற மோசமான நிலையில் உள்ளது. இதனை மாற்றும் உத்வேகத்துடன் அவர் களமிறங்க இருந்தார். இந்த நிலையில் அவர் இல்லாதது, அவரது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. தற்போது ஒருநாள் தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையிலும் இது பின்னடைவாக கருதப்படுகிறது. ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் விளையாடுகிறாரா இல்லையா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

பிரியாங் பஞ்சால்

பிரியாங் பஞ்சால்

ரோகித் சர்மா விலகியுள்ளதால் அவருக்கு பதிராக 30 வயதான பிரியாங் பஞ்சால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரியாங் பஞ்சால் தென்னாப்பிரிக்கா ஏ தொடரில் இந்திய ஏ அணியை வழிநடத்தி அதிபட்சமாக 96 ரன்களை சேர்த்தார், உள்ளூர் போட்டியில் அனுபவ வீரராக பார்க்கப்பட்ட பிரியாங் பாஞ்சலுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

Story first published: Monday, December 13, 2021, 18:57 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+