Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேட்சை விட்ட சீனியர்.. பச்சை பச்சையாக திட்டிய ரோகித்.. பந்தை உதைத்து ஆத்திரம்..நடவடிக்கை பாயுமா?

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி மோசமான ஃபில்டிங் செய்தது.

வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்திய அணி இருபது ஓவர் முடிவில்,

5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வீரர்களும் அபாரமாக விளையாடினர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாட முயன்றனர். கெயில் மெயர்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழக்க, பிராண்ட்ன் கிங் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். பவர்பிளே முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து நிக்கோலஸ் பூரான், பொவேல் ஜோடி இணைந்து இந்தியாவின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

நழுவவிட்ட புவனேஸ்வர்

நழுவவிட்ட புவனேஸ்வர்

நிக்கேலஸ் பூரான் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இளம் வீரர் பிஸ்னாய் தவறவிட்டார். இதனையடுத்து அவர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை, பொவேல் அடிக்க பந்து உயரத்திற்கு சென்றது. இதனை புவனேஸ்வர் குமார் பிடிப்பார், ஆட்டமே மாறிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அந்த கேட்சை நழுவ விட்டார்.

ரோகித் காட்டம்

ரோகித் காட்டம்

இதனை கண்டு ஆத்திரமடைந்த ரோகித் சர்மா, கீழே விழுந்த பந்தை ஆத்திரத்தில் உதைத்தார். இதனை பயன்படுத்தி கொண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மேலும் ஒரு ரன் ஓடினர். அதன் பிறகு, சீனியர் வீரர் என்று கூட பார்க்காமல் புவனேஸ்வர் குமாரை பச்சை பச்சையாக திட்டினார் ரோகித் சர்மா

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இது குறித்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரோகித் சர்மாவிடம் அவரது செயல் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு, நாங்கள் ஃபில்டிங்கில் மோசமாக செயல்பட்டோம். கேட்சை பிடித்தி இருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறி இருக்கும். இதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். பரவாயில்லை, கேட்ச் விடுவது எல்லாம் ஆட்டத்தில் சகஜம் தான். அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்று பதில் அளித்தார்.

Story first published: Friday, February 18, 2022, 23:46 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+