Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு எதிரான 3வது போட்டி.. ரோகித் நினைத்தது நடந்தது.. இந்தியாவுக்கு விதி கைக் கொடுக்குமா ?

சென்னை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னையில் தொடங்கியது. இதற்காக சேப்பாக்கம் மைதானமே திருவிழா போல் உள்ளது.

இரு அணிகளும் தலா 1 போட்டியை வென்றுள்ள நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி தற்போது நடைபெற்றுள்ளது.

சென்னையில் ஆடுகளம் எப்போதும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளும் தங்களது ஸ்பின்னர்களை அதிகப்படுத்தி உள்ளனர்.

Rohit sharma lucky at the toss in chennai odi vs australia

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்மித், முதலில் விளையாடி ரன்களை குவித்து இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்துவோம் என்று கூறியுள்ளார். ஆடுகளம் மிகவும் வறண்ட நிலையில் இருப்பதால், 2 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவதாகவும் ஸ்மித் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, தாங்கள் டாஸ் வென்றால் பந்துவீச தான் இருந்தோம். இதனால் தமக்கு மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார். வேகப்பந்துவீச்சாளரை கூடுதலாக சேர்க்கலாம் என்று நினைத்ததாகவும், ஆனால் ஆடுகளத்தை பார்த்த பிறகு தொடர்ந்து 3 ஸ்பின்னர்களை பயன்படுத்த முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்திய அணியில் பார்மில் இல்லாத வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், அப்போது தான் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விளையாட முடியும் என்றும் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு முன் இது போன்ற பலமான அணியுடன் விளையாடுவது நிச்சயம், அணிக்கு நல்லது என்றும் ரோகித் கூறியுள்ளார்.

Rohit sharma lucky at the toss in chennai odi vs australia

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல், 6, ஹர்திக் பாண்டியா, 7, ஜடேஜா, 8, முகமது ஷமி, 9, முகமது சிராஜ், 10, அக்சர் பட்டேல் 11, குல்தீப் யாதவ்

Story first published: Wednesday, March 22, 2023, 13:25 [IST]
Other articles published on Mar 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+