Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியாவுக்கு பின்னடைவு.. நட்சத்திர வீரருக்கு காயம்.. சமாளிக்குமா ரோகித் படை?

மான்செஸ்டர் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று தொடங்கியது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று சமநிலையில் உள்ளது .

இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை.

 மான்செஸ்டர்

மான்செஸ்டர்

மான்செஸ்டர் நகர் எப்போதுமே இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது இல்லை. கடைசியாக இந்திய அணி மான்செஸ்டர் நகரில் விளையாடிய போட்டியை யாராலும் மறந்திருக்க முடியாது .2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி மான்செஸ்டர் நகரில் களம் இறங்கி உள்ளது.

 ஆடுகளம்

ஆடுகளம்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், நூறு ஓவர் கடந்தாலும் ஆடுகளம் மாறாது. எனவே முதலில் நாங்கள் எந்த இலக்கை துரத்த போகிறோம் என்று தெரிந்து கொண்டு பிறகு பேட்டிங் செய்தால் சாதகமாக இருக்கும் என நம்புவதாக ரோகித் சர்மா கூறினார்.

 பாடம் கற்றோம்

பாடம் கற்றோம்

கடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் தங்களது அணி சரியாக விளையாடவில்லை என்று குறிப்பிட்ட அவர், தவறிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார். பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு எங்களுக்கு குறைந்த இலக்கை துரத்தும் வகையில் செயல்படுவார்கள் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டார். பும்ராவுக்கு பதிலாக இந்திய அணி முகமது சிராஜை தேர்வு செய்துள்ளது.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இங்கிலாந்து அணியை பொறுத்த வரை பிளையிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்ல. இந்திய அணியில் 1,ரோகித் சர்மா 2, தவான் 3, விராட் கோலி 4, சூர்யகுமார் யாதவ் 5, ரிஷப் பண்ட் 6,ஹர்திக் பாண்டியா 7,ரவீந்திர ஜடேஜா 8,முஹம்மது ஷமி 9, சிராஜ் 10, சாஹல் 11,பிரசித் கிருஷ்ணா.

Story first published: Sunday, July 17, 2022, 16:16 [IST]
Other articles published on Jul 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+