Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸில் தோற்றாலும் நல்ல விஷயம்.. 3வது ODIல் 2 ஸ்டார் வீரர்களை நீக்கிய ரோகித்..வித்தியாசமான ப்ளேயிங்11

இந்தூர்: நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வியடைந்த போதும், சாதகமான விஷயத்தை தூக்கி கொடுத்துள்ளார் டாம் லேதம்.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹொல்கர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் ஒயிட் வாஷ் செய்ய இன்று களமிறங்குகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எப்படியாவது பதிலடி கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் களமிறங்குகிறார்கள்.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

டாஸில் தோல்வியடைந்த போதும் இந்தியாவுக்கு நல்ல விஷயம் தான் நடந்துள்ளது. ஏனென்றால் பேட்டிங்கிற்கு சொர்க்கமாக பார்க்கப்படும் ஹொல்கார் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் சராசரியாக 307 ரன்கள் வரை அடிக்கலாம். 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு சற்று தடுமாற்றமாக இருக்கலாம். நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங் தான் எடுத்திருப்போம் என ரோகித்தே கூறியிருந்தார்.

அணி மாற்றம்

அணி மாற்றம்

இந்திய அணியை பொறுத்தவரையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பேட்டிங்கில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு தந்துவிட்டு, இஷான் ஓப்பனிங் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங் வரிசையில் ஒரு மாற்றத்தை கூட ரோகித் செய்யவில்லை. இதே போல வாஷிங்டன் சுந்தருக்கு மாற்றாக சபாஷ் அகமது கொண்டு வரப்படுவார் என நினைத்த சூழலில் ஏமாற்றமே மிஞ்சியது.

பவுலிங் மாற்றங்கள்

பவுலிங் மாற்றங்கள்

பந்துவீச்சில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் இருவருமே வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளனர். மாற்று வீரர்களாக உம்ரான் மாலிக் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். மற்றொரு இடத்திற்கு யுவேந்திர சாஹல் கொண்டு வரப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர்

Story first published: Tuesday, January 24, 2023, 13:29 [IST]
Other articles published on Jan 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+