விராட் கோலி எடுக்கும் புது அவதாரம்.. தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20.. ரோகித் சர்மா மாஸ் முடிவு!
மும்பை: தென்னாப்பிரிக்க அணியுடனான தொடரில் விராட் கோலியை வைத்து ரோகித் சர்மா மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளார்.
Recommended Video
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது.
இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை இரவு திருவனந்தபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ப்ளேயிங் 11
இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து பல முன்னணி வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. தீபக் ஹூடா காயம் காரணமாகவும், முகமது ஷமி கொரோனா காரணமாகவும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரோகித் அதிரடி முடிவு
இந்நிலையில் இந்த மாற்றங்களை சரி செய்ய ரோகித் சர்மா அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார். அதாவது இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளதால் 3 வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு வந்தே தீர வேண்டும். இதே போல பேட்டிங்கிலும் கூடுதலாக ஒருவர் வரவேண்டும். இப்படி தனி தனி வீரர்களை சேர்த்தால் 5 பவுலர்கள் மட்டுமே ப்ளேயிங் 11ல் இருப்பார்கள்.

6வது பந்துவீச்சாளர்
இதனை சரி செய்வதற்காக விராட் கோலியை முன்கூட்டியே தயார் செய்துள்ளனர். அதாவது இந்திய பேட்டிங் வரிசையில் ரோகித், கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் என 6 பேர் களமிறங்குகின்றனர். பவுலிங்கில் 5 பேர் என மொத்தம் 11 பேர் இருப்பார்கள். எனவே விராட் கோலியை 6வது பவுலராக கொண்டு வரவுள்ளனர்.

என்ன காரணம்
இந்திய களங்களில் பெரும்பாலும் 4வது வேகப்பந்துவீச்சாளரின் தேவை அதிகம் இருக்காது. ஆஸ்திரேலியாவுடனான 3வது போட்டியில் கூட 2 ஓவர்கள் வரை தான் 4வது பவுலருக்கு கொடுக்கப்பட்டது. மற்றபடி ஸ்பின்னர்களுக்கு தான் சாதகமாக அமையும். எனவே விராட் கோலியை பார்ட் டைம் ஸ்பின்னராக கொண்டு வர ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications