டெத் ஓவர் பிரச்சினைக்கு இன்று தீர்வு.. ரோகித் போட்ட மெகா ப்ளான்.. அந்த வீரர் மீது இவ்ளோ நம்பிக்கையா?

இந்தூர்: தென்னாப்பிரிக்க அணியுடனான 3வது டி20 போட்டியில் பும்ராவுக்கு மாற்று வீரர் குறித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுடனான 3வது டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது.

இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் கடைசி போட்டி இதுதான் ஆகும். எனவே இந்த போட்டியில் தவறுகளை சரி செய்துக்கொள்ள வேண்டும்.

என்ன ஷிம்ரன் இது எல்லாம் ? இது எல்லாம் ஒரு காரணமா ? டி20 உலககோப்பையிலிருந்து ஹேட்மயர் நீக்கம்என்ன ஷிம்ரன் இது எல்லாம் ? இது எல்லாம் ஒரு காரணமா ? டி20 உலககோப்பையிலிருந்து ஹேட்மயர் நீக்கம்

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

ரோகித் சர்மா படையில் தற்போது இருக்கும் பவுலிங் தான். சமீபத்தில் நடந்த அனைத்து போட்டிகளிலும் டெத் ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்குகின்றனர். ஜஸ்பிரித் பும்ராவும் இல்லாததால் 17 மற்றும் 19வது ஓவர்களை வீசுவதற்கு முன்னணி பவுலர் இன்றி தடுமாறுகின்றனர். இந்நிலையில் இதற்கு இன்று முடிவு கட்டப்படும்.

ஒரே நம்பிக்கை

ஒரே நம்பிக்கை

இந்திய அணிக்கு தற்போது உள்ள ஒரே நம்பிக்கை தீபக் சஹார் தான். கடந்த 2 போட்டிகளிலும் பவர் ப்ளே மற்றும் மிடில் ஓவர்களில் ஸ்பெஷலிஸ்டாக உள்ள அவர் வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவரை கடந்த போட்டியில் 17வது ஓவரை வீச வைத்து பார்த்தார் ரோகித் சர்மா. அதில் நல்ல பலன் கிடைத்தது.

புது திட்டம்

புது திட்டம்

எனவே இன்றைய போட்டியில் தீபக் சஹாரை கடைசி 17வது மற்றும் 19வது ஓவரை வீச வைத்து ரோகித் பரிசோதிக்கவுள்ளார். ஒருவேளை அவர் சிறப்பாக செயல்பட்டுவிட்டால், பும்ராவுக்கு மாற்று வீரராக உறுதி செய்யப்பட்டுவிடுவார். ஒருவேளை சொதப்பிவிட்டால் முகமது ஷமியை ஒரே முடிவாக அணிக்குள் சேர்த்துவிடுவார்கள்.

வல்லுநர்கள் கருத்து?

வல்லுநர்கள் கருத்து?

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முகமது ஷமி இந்தாண்டில் இன்னும் ஒரு சர்வதேச டி20யில் கூட விளையாடவில்லை. மற்றொருபுறம் தீபக் சஹார் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். எனவே அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தான் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Captain Rohit sharma makes a new plan by Deepak chahar to Solve death over Issue in India vs south africa 3rd T20
Story first published: Tuesday, October 4, 2022, 18:25 [IST]
Other articles published on Oct 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X