இன்னும் சந்தேகம்தான்.. தன்னுடைய நண்பருக்காக ரோஹித்துக்கு செக் வைக்கும் கோலி.. இப்படி ஒரு திட்டமா?
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா களமிறங்குவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்க உள்ளது. இந்த தொடரில் ஆட உள்ள இங்கிலாந்து வீரர்கள் தற்போது சென்னை வந்துள்ளனர்.
இந்திய அணி வீரர்களும் தற்போது சென்னை வந்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா சோதனை நெகட்டிவ் வந்த நிலையில் இன்னும் சில நாட்களில் இவர்கள் பயிற்சியை தொடங்க உள்ளனர்.

ரோஹித்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா களமிறங்குவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ரோஹித் சர்மா ஆடினார். காயம் காரணமாக இந்த தொடரின் தொடக்கத்தில் அவர் ஆடவில்லை.

ஆடவில்லை
அதேபோல் இவர் ஆடிய இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. போட்டியை மாற்ற கூடிய அளவிற்கு இவரின் ஆட்டம் அவ்வளவு அதிரடியான ஆட்டமாக இல்லை. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இவர் ஆடுவது சந்தேகம் என்கிறார்கள்.

வாய்ப்பு
அதன்படி கே. எல் ராகுலை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறக்க கோலி முடிவு செய்துள்ளார். ரோஹித் சர்மாவை விட கோலிக்கு ராகுல்தான் மிகவும் நெருக்கமான வீரர். இதனால் ராகுல்தான் ஓப்பனிங் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

வெளிநாடு
அதோடு ரோஹித் சர்மாவை வெளிநாட்டு போட்டிகளில் ஓப்பனிங் இறக்கவும், ராகுலை உள்நாட்டு போட்டியில் ஓப்பனிங் இறக்கவும் கோலி முடிவு செய்துள்ளார் என்கிறார்கள் . இதை காரணமாக சொல்லி ரோஹித் சர்மாவை கோலி ஓரம்கட்ட போகிறார் என்று கூறப்படுகிறது. இதே போல கோலி பலரை ஓரம்கட்டி உள்ளார்.

அஸ்வின் வேண்டாம்
ஒருநாள் அணிக்கு அஸ்வின் வேண்டாம் என்று கூறி, அவரை டெஸ்ட் அணியில் மட்டும் எடுத்தார். அதேபோல் ரஹானேவை டெஸ்ட் அணியில் மட்டும் ஆட வைத்தார். இந்த நிலையில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் வெளிநாட்டு போட்டிகளில் மட்டும் ஆட வைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications