Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பார்த்துக்குங்க.. கிளம்பும் முன் சொல்லிவிட்டு செல்லும் கோலி.. பெரிய திட்டம்..ரோஹித்திற்கு என்ன ஆகுமோ

சிட்னி: இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா வாய்ப்பு பெற்றாலும், அவர் ஆடும் அணியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுவிட்டது.

டி 20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுவிட்டது. இதனால் டெஸ்ட் தொடரை வெல்ல போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படி

எப்படி

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடுவார். முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இவர் ஆடுவார். அனுஷ்கா சர்மாவிற்கும் கோலிக்கும் குழந்தை பிறக்க உள்ளதால் இவர் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இன்னொரு பக்கம் இந்திய அணியின் முன்னணி வீரர் ரோஹித் சர்மா தற்போது தனது பிட்னஸை நிரூபித்துள்ளார். நாளை இவர் ஆஸ்திரேலிய புறப்பட்டு செல்ல இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இவர் இணைவார்.

ஆனால் வாய்ப்பு

ஆனால் வாய்ப்பு

ஆனால் இவர் ஆஸ்திரேலியா சென்றாலும் டெஸ்ட் அணியில் கலந்து கொள்வது கடினம். இவர் ஒன்றரை மாதமாக கிரிக்கெட் விளையாட வில்லை . டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆடி பல மாதங்கள் ஆகிறது . போதிய டெஸ்ட் அனுபவம் இல்லை . இப்போதும் கூட ஆஸ்திரேலிய மண்ணில் இவர் பயிற்சி மேற்கொள்ளவில்லை.

பயிற்சி

பயிற்சி

ஆஸ்திரேலியாவில் இவர் பயிற்சி மேற்கொள்ளாத காரணத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சமயத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இவர் தனது வாய்ப்பை இழக்காமல். மற்ற வீரர்கள் ஆஸ்திரேலியாவில் முறையான பயிற்சி மேற்கொண்டு உள்ளனர். ஒப்பனர்கள் சொதப்பினால் வேண்டுமானால் ரோஹித்திற்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

கேப்டன்

கேப்டன்

முதல் டெஸ்டிற்கு பின் கோலி நாடு திரும்பி விடுவார். அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார். யார் எல்லாம் ஆட வேண்டும் என்று கோலி சொல்லிவிட்டுத்தான் செல்வார். ஆனால் கோலி இந்தியா திரும்பும் முன், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ள வீரர்கள் யார் என்று தேர்வு செய்துவிட்டுத்தான் செல்வாராம் . கோலி எடுக்கும் முடிவே இதில் இறுதியானது. இதனால் ரோஹித்திற்கு கோலி வாய்ப்பு வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Sunday, December 13, 2020, 22:43 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+