Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடியே தீர வேண்டும்.. உறுதியாக சொன்ன ரோஹித் சர்மா.. ரவி சாஸ்திரி அளித்த ஷாக் பதிலடி.. போச்சு!

சிட்னி: இந்திய அணியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மா உறுதியாக இருக்கிறார். ஆனால் இந்திய அணியில் ரோஹித் சர்மாவை சேர்க்கும் எண்ணம் ரவி சாஸ்திரிக்கு இல்லை என்று தகவல்கள் வருகிறது.

இந்திய வீரர் ரோஹித் சர்மா தனது பிட்னஸை நிரூபித்துவிட்டு தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டியில் கலந்து கொள்ள இவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

என்ன

என்ன

இந்திய அணியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மா உறுதியாக இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர்கள் மண்ணிலேயே டெஸ்ட் விளையாடுவது என்பது எனக்கு சவாலான ஒன்று. இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வந்தேன். காயத்தில் இருந்து மீண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

மீண்டும் வந்தேன்

மீண்டும் வந்தேன்

இந்திய அணியில் மீண்டும் இணைவது நம்பிக்கை அளிக்கிறது. இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தியாவுடன் இணைந்து அடுத்த போட்டியில் ஆட வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணியில் ரோஹித் சர்மாவை சேர்க்கும் எண்ணம் ரவி சாஸ்திரிக்கு இல்லை என்று தகவல்கள் வருகிறது. ஆம் இந்திய அணியில் மயங்க் அகர்வாலை நீக்க உள்ளனர். ஆனால் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டிக்காக கே. எல் ராகுல் தீவிரமாக தயாராகி வருகிறார் . அதனால் அவர்தான் ஓப்பனிங் இறங்க வேண்டும் ஏ ன்று ரவி சாஸ்திரி கருதுவதாக கூறுகிறார்கள்.

ரோஹித் உறுதி

ரோஹித் உறுதி

ரோஹித் சர்மா களமிறங்குவார் என்று உறுதி அளிக்க முடியாது என்று ரவி சாஸ்திரி கூறியதாக கூறப்படுகிறது. ரோஹித்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாஸ்திரி இப்படி பேசி உள்ளார். அணியில் இருந்து ஹனுமா விஹாரி நீக்கப்பட்டால் மட்டுமே ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, December 30, 2020, 14:59 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+