இதுக்குத்தான் ஸீனா.. இனிமே நீங்க தேவையில்லை.. ரோஹித் மீது கோபத்தில் கோலி.. அந்த அதிரடி முடிவு?
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓப்பனிங் வீரர் ரோஹித் சர்மா ஆடிய விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் முடியும் தருவாயை எட்டியுள்ளது. இன்றைய போட்டியில் எந்த விதமான முடிவும் வர வாய்ப்புள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்தியாவிற்கு இங்கிலாந்து 419 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி நாள்
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் சிறப்பாக இருப்பதால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றால் கூட ஆச்சர்யம் அடைய கூடாது. அந்த அளவிற்கு இந்திய அணி இதில் அதிரடியாக ஆட வாய்ப்புள்ளது. முடிவு எப்படி வேண்டுமானாலும் செல்ல வாய்ப்பு உள்ளது.

ரோஹித் சர்மா
இந்திய அணியில் தற்போது ஓப்பனிங் வீரராக களமிறங்கி வரும் ரோஹித் சர்மா மிக மோசமாக சொதப்பி உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை. ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும் ரோஹித் சர்மா கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்.

இங்கிலாந்து
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் ரோஹித் சர்மா பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கவில்லை . இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் 6 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 12 ரன்கள் எடுத்து மோசமாக சொதப்பினார். இவரின் ஆட்டம் போட்டியை மாற்ற கூடிய வகையில் சிறப்பாக இல்லை.

ஐபிஎல்
ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை. உலகக் கோப்பை தொடரில் நன்றாக ஆடிய ரோஹித் அதன் பின் எங்கும் சரியாக ஆடவில்லை. லோ பார்மெட் வீரரான இவர் டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாமல், டெஸ்ட் போட்டிக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்.

கோலி
இதனால் கோலி இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்புகொடுப்பார். அதற்கு மேல் ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் போட்டிகளில் கோலி வாய்ப்பு வழங்க மாட்டார் என்கிறார்கள். ரோஹித் ஆட்டத்தை பார்த்து கோலி அவ்வளவு சந்தோஷமாக இல்லை.

கோபம்
கோலி கொஞ்சம் கோபத்தில் இருக்கிறார்.இவரை வைத்து இனியும் டெஸ்ட் செய்ய வேண்டாம். இந்திய பிட்சில் நன்றாக ஆடும் ராகுல், மயங்க் போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தில் கோலி இருப்பதாக கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications