Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பையில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு?. தொடரும் விமர்சனங்கள்... ரோகித் சர்மா விளக்கம்

அகமதாபாத்: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் கே.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து ரோகித் பதில் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இந்த தொடரில் பெரியளவில் சொதப்பிய கே.எல்.ராகுல் மீது பல்வேறு விமர்சனங்கள் அடுத்தடுத்து வரிசைக்கட்டி கொண்டு நிற்கிறது. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரோகித் சர்மா.

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற கே.எல்.ராகுல் அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றார். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின்னர் இடையில் சர்வதேச போட்டிகள் எதிலும் ஆடாமல், கிரிக்கெட் பயிற்சி இல்லாமல் உள்ளூர் போட்டிகளில் ஏதும் பங்கேற்க முடியாமல், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்றார்.

தொடர் சொதப்பல்

தொடர் சொதப்பல்

எந்தவித பயிற்சியும் இல்லாததால் கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பினார். இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்த அணி நிர்வாகம் அவருக்கு முதல் 4 போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கியது. அதில் 1, 0, 0, 14 என ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். இதன் காரணமாக 5வது டி20 போட்டியில் அவரின் இடத்திற்கு நேரடியாக விராட் கோலி களமிறங்கினார்.

 5வது டி20 போட்டி

5வது டி20 போட்டி

நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த போட்டியில் இவர்களின் சிறப்பான தொடக்கம் பின் வந்த வீரர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஒரு வேளை இந்த போட்டியிலும் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க முடியுமா எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் கே.எல்.ராகுல் உலகக்கோப்பை டி20யில் வாய்ப்பு வழங்கப்படாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரோகித் சர்மா, உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய காலங்கள் உள்ளன. அதுகுறித்து இப்போதே பேசக்கூடாது. கே.எல்.ராகுல் இந்திய அணியின் முக்கியமான வீரராவார். 5வது டி20ல் ஒதுக்கப்பட்டதால் அவர் டி20 உலககோப்பையில் இல்லை என்று அர்த்தம் அல்ல. இன்னும் நாட்கள் உள்ளன. எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே தற்போது அணிகுறித்து கணிக்கவும் பேசவும் முடியாது என தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, March 21, 2021, 22:28 [IST]
Other articles published on Mar 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+