Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“டிராவிட்டின் கோச்சிங் எப்படி உள்ளது?”.. சர்ச்சைக்கு இடையே ரோகித் கூறிய பதில்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

மும்பை: இந்திய அணியில் ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ரோகித் சர்மா பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து செயல்பட ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கிவிட்டு தற்போது ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது.

 குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட விருப்பம் தெரிவித்தும் அதனை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ இது போன்ற முடிவை எடுத்துள்ளது. டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனி தனி கேப்டன் இருந்தால் தேவையின்றி பிரச்சினை ஏற்படும் என்பதால் கோலியை நீக்கியதாக பிசிசிஐ விளக்கமளித்தது. எனினும் அதனை ஏற்காத ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மற்றொரு புறம் டிராவிட் தான் கோலியின் பதவி நீக்கத்திற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ரோகித் பேச்சு

ரோகித் பேச்சு

இந்நிலையில் ராகுல் டிராவிட் குறித்து இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். ராகுல் டிராவிட்டுடன் 3 போட்டிகளில் தான் பணியாற்றியுள்ளேன். ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது. கடினமான சூழல்களில் டிராவிட் எப்படி விளையாடியுள்ளார் என்பதை எங்களால் சுலபமாக உணர முடிகிறது. டிராவிட்டுடன் இருந்தால் எந்தவித அழுத்தமும் இல்லாதது போன்று உள்ளது.

எங்களின் அதிர்ஷ்டம்

எங்களின் அதிர்ஷ்டம்

ஒரு அணியில் வீரர்கள் அழுத்தங்கள் இன்றி சரியான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் ஆட்டம் சிறப்பாக இருக்கும். அது டிராவிட்டால் எங்களுக்கு கிடைக்கிறது. இந்த சிறிய காலத்திலேயே அவருடன் நிறைய ஆலோசனைகளை செய்துள்ளேன். அதில் பலவற்றை கற்றுக்கொண்டுள்ளேன். இது எங்களுக்கு அதிர்ஷ்டம் என்று கூறலாம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Recommended Video

இந்திய அணியின் Captain Rohit Sharma அதிரடியான முதல் திட்டம் | Oneindia Tamil
முதல் சுற்றுப்பயணம்

முதல் சுற்றுப்பயணம்

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் முழு நேர ரோகித் சர்மா எதிர்கொள்ளும் முதல் தொடராகும். ஒருநாள் தொடர்களில் ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் ஆகியோரின் செயல்பாடுகளை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Story first published: Monday, December 13, 2021, 22:17 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+