Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொதப்பியது ரோகித்தின் பிளான்.. அடுத்தடுத்து சரிந்த இந்திய விக்கெட்.. ஹர்திக்கும் ஏமாற்றம்

பெர்த்: டி20 உலககோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி போட்ட எந்த திட்டமும் கைக்கூடவில்லை.

இதே போன்று இந்திய அணியின் பேட்டிங்கும் இன்று சீட்டு கட்டு போல் சரிந்தது. இதனால் விராட் கோலிக்கு இன்று கடும் அழுத்தம் உண்டாகி அவரும் ஆட்டமிழந்தார்.

பெர்த் ஆடுகளத்தில் ஏற்கனவே ஒரு போட்டி இன்று நடந்ததால், ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சேஸிங் தான் ஈஸி

சேஸிங் தான் ஈஸி

ஆனால் எப்போதும் ஒரு அணியின் வேகப்பந்து பலமாக இருந்தால், அப்போது அவர்களை எதிர்கொள்ளும் போது சேஸிங் தான் சிறந்த முடிவாக இருக்கும். காரணம், பலமான வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது முதலில் பேட் செய்தால் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க வாய்ப்பு ஏற்படும். இதனை எதிர் அணி எளிதாக கடந்துவிடலாம்.

வெல்ல முடியும்

வெல்ல முடியும்

இதுவே பலமான பந்துவீச்சு உடைய அணிக்கு எதிராக சேஸிங் செய்யும் போது, இந்த இலக்கு தான் என்று தெரிந்துவிடும். அதற்கு ஏற்றார் போல் இன்னிங்சை கட்டு அமைத்துவிடலாம். இதில் ரோகித் செய்தது தவறாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக கூட நாம் இரண்டாவது பேட்டிங் செய்ததால் தான் வெல்ல முடிந்தது.

தீபக் ஹூடா

தீபக் ஹூடா

இதே போன்று பேட்டிங்கை வலுப்படுத்த தீபக் ஹூடாவை சேர்த்தது தவறாக பார்க்கப்படுகிறது. அதற்கு அக்சர் பட்டேல் அணியில் இருந்திருக்கலாம். தீபக் ஹூடா காயத்திற்கு பிறகு இப்போது தான் முதல் சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். அதற்கு பதில் ரிஷப் பணட் நல்ல சாய்சாக இருந்திருக்கலாம்.

ஹர்திக் பாண்டியா சொதப்பல்

ஹர்திக் பாண்டியா சொதப்பல்

இதே போன்று ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் சொதப்புவதும், தொடக்க வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழப்பதும் விராட் கோலிக்கு தான் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் விராட் கோலியே அனைத்து போட்டியிலும் ரன் அடித்து காப்பாற்ற முடியுமா, இதனால் ராகுல் தனது பழைய பார்மை மீட்க வேண்டும்.

Story first published: Sunday, October 30, 2022, 18:21 [IST]
Other articles published on Oct 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+