Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபார்மில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை.. பாக். எதிரான ஆட்டத்தில் கோலி,ராகுல் இல்லை.. கடுப்பான ரோகித்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாது என்று ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

India Pakistan உடன் மோதும் Hong Kong! Asia Cup-ல் Qualify ஆனது | Aanee's Appeal

வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

ஏற்கனவே டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

2 நட்சத்திரங்கள்

2 நட்சத்திரங்கள்

இதனால் பலமான அணியை கட்டமைக்கும் முயற்சியில் ரோகித் சர்மா உள்ளார். ஏற்கனவே, பிளேயிங் லெவனில் யாரை சேர்ப்பது, யாரை விடுவது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளார். இந்த நிலையில், அணியின் நட்சத்திர வீரர்களான கோலி, ராகுல் ஆகியோர் மேட்ச் பிராக்டிஸ் இல்லாத நிலையில் உள்ளனர். இங்கிலாந்து தொடருக்கு பிறகு இப்போது தான் கோலி அணிக்கு திரும்பி இருக்கிறார்.

பின்னடைவை தரலாம்

பின்னடைவை தரலாம்

மேலும் ராகுல் ஐபிஎல் தொடருக்கு பிறகு ஜிம்பாப்வே தொடருக்கு தான் அணிக்கு திரும்பியுள்ளார். இருவருமே தற்போது பேட்டிங்கில் எப்படி செயல்படுவார்கள் என்று தெரியாது. இந்த நிலையில், முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருவரையும் சேர்த்தால், அது அணிக்கு பின்னடைவை தரும் என ரோகித் அச்சப்படுகிறார்.

விமர்சனத்தால் கோபம்?

விமர்சனத்தால் கோபம்?

இதற்கிடையில், ரோகித் சர்மாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் விராட் கோலி போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு, ஹிட்மேனை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே உள்ள நட்பில் விரசல் ஏற்பட்டுள்ளது. ரோகித்தின் இந்த திட்டத்தை அறிந்து தான், கோலி இப்படி பதிவிட்டாரா, இல்லை கோலியின் பதிவால் கடுப்பான ரோகித் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளாரா என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்

ரோகித் லெவன்

ரோகித் லெவன்

இதனிடையே ரோகித் சர்மா முன்மொழிந்துள்ள பிளேயிங் லெவனை தற்போது காணலாம். இது வெறும் உத்தேசம் மட்டுமே, அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது. 1, ரோகித் சர்மா, 2, சூர்யகுமார் யாதவ், 3, தீபக் ஹூடா, 4, ரிஷப் பண்ட், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, ஜடேஜா, 8, புவனேஸ்வர் குமார், 9, அஸ்வின், 10, ஆர்ஸ்தீப் சிங், 11, சாஹல்.

Story first published: Friday, August 26, 2022, 21:38 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+