Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ என்ன வேணா பண்ணு.. நான் மதிக்க கூட மாட்டேன்.. ரூட் செய்த அந்த காரியம்.. ரோஹித் கொடுத்த ரிப்ளே!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா ஆடி வரும் விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 3 விக்கெட்டை இழந்தும் கூட இந்திய அணி அதிரடி காட்டி வருகிறது.

ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 82 ரன்களை எடுத்துள்ளார். 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 120 ரன்கள் எடுத்துள்ளது.

எப்படி

எப்படி

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா ஆடி வரும் விதம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி வந்தார். அதிலும் ஸ்பின் பவுலர்களை ரோஹித் சர்மா சிறப்பாக எதிர்கொண்டார்.

ஸ்பின்

ஸ்பின்

ஸ்பின் பவுலிங்கில் புஜாரா, ரஹானே, கோலி போன்றவர்கள் கடுமையாக திணறினார்கள். ஆனால் ரோஹித் சர்மா அப்படி எந்த அழுத்தமும் இன்றி சிறப்பாக ஆடினார். முக்கியமாக ஜாக் லீச் ஓவரில் ரோஹித் சர்மா தெறிக்கவிட்டுக்கொண்டு இருந்தார்.

அழுத்தம்

அழுத்தம்

இதனால் மெண்டல் ரீதியாக ரூட் ரோஹித் சர்மாவிற்கு அழுத்தம் கொடுத்தார். அதன்படி ரோஹித்திடம் செல்லும் எல்லா பந்துகளையும் விக்கெட்டா என்று கேட்டார். அதிலும் அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் சென்ற பந்தை எல்லாம் எல்பிடபிள்யூவா என்று கேட்டனர். ஜாக் லீச் ஓவரில் இதேபோல் விக்கெட் கேட்டனர்.

தேவையின்றி

தேவையின்றி

அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் சென்ற பந்தை ரிவ்யூ கேட்டனர். ஆனால் ரோஹித் இதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. நீங்கள் ரிவ்யூ கேளுங்கள். நான் அவுட் இல்லை. எனக்கு கவலை இல்லை என்று ரோஹித் கொஞ்சம் கூட கவலையின்றி உறுதியாக நின்று ஆடினார்.

விக்கெட்

விக்கெட்

அந்த ரிவ்யூவின் போது ரோஹித் தான் விக்கெட் இல்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். இன்று ரோஹித் உண்மையில் நல்ல பார்மில் இருக்கிறார். இந்திய அணியை சரிவில் இருந்து ரோஹித் சர்மா முழுமையாக மீட்டு இருக்கிறார்.

Story first published: Saturday, February 13, 2021, 13:10 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+