Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 போட்டி தான்.. கவலைப்பட வேண்டியதில்லை.. தோல்விக்கு காரணம் கூறும் ரோகித் சர்மா

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் இந்தியா தோல்வியை தழுவியது.

இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரிலிருந்த இந்தியா வெளியேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இதனால் இந்திய ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே இந்திய அணியின் தோல்வி குறித்து ரோகித் சர்மா சில காரணங்களை கூறி இருக்கிறார். இதனை தற்போது காணலாம்.

குறைவான ரன்கள்

குறைவான ரன்கள்

நாங்கள் தவறான சூழலில் சிக்கி கொண்டு விட்டோம். நாங்கள் எங்கள் பேட்டிங்கில் விளையாடும் போது நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால் அதனை சிறப்பாக பயன்படுத்தி முடிக்கவில்லை. ஒரு 10 அல்லது 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.ஆட்டத்தின் 2வது பகுதி எங்களுக்கு சிறப்பானமாக அமையவில்லை. பேட்ஸ்மேன்கள் எப்படி ஷாட் ஆடி ரன்களை குவிக்க வேண்டும் என்று கற்று கொள்ள வேண்டும்.

பாடம் கற்றோம்

பாடம் கற்றோம்

கிரிக்கெட்டில் இப்படி எல்லாம் நடக்கத் தான் செய்யும். இது போன்ற தோல்விகள் ஒரு அணியாக எப்படி செயல்பட வேண்டும் என்பதை எங்களுக்கு உணர்த்தும். பந்துவீச்சை பொறுத்தவரை, இலங்கை அணியினர் இவ்வளவு நல்ல தொடக்கத்தை பெற்ற பிறகும், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்றோம்.

பயன் அளிக்கவில்லை

பயன் அளிக்கவில்லை

எங்களது சுழற்பந்துவீச்சாளர்கள் ஆக்கோரஷமாக பந்துவீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆனால் இலங்கை கடைசி வரை பதற்றப்படாமல் வெற்றி பெற்றுவிட்டது. மைதானத்தின் பெரிய பவுண்டரி பக்கத்தை சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்படுத்த முடிவு எடுத்தோம். ஆனால் அந்த திட்டம் பயன்படுத்தவில்லை. தீபக் ஹுடாவை பயன்படுத்த தான் நினைத்தேன்.

எடை போடாதீர்கள்

எடை போடாதீர்கள்

ஆனால் 3 வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டதால், அதற்கான சூழல் தேவைப்படவில்லை. ஆவேஷ் கானுக்கு உடல் நலம் சரியில்லை. அவர் முழு உடல் தகுதியை எட்டாததால், அவர் இலங்கைக்கு எதிராக களமிறங்கவில்லை. டி20 உவகக் கோப்பைக்கு பிறகு நாங்கள் சில போட்டிகளில் தான் தோற்று இருக்கிறோம். இதனால் அச்சமும், கவலையும் படத்தேவையில்லை. புவனேஸ்வர் குமார் எங்களுக்காக பல போட்டிகளை வென்று தந்து இருக்கிறார். இந்தப் போட்டிகளை வைத்து அவரை எடைப் போடக்கூடாது.

Story first published: Wednesday, September 7, 2022, 10:47 [IST]
Other articles published on Sep 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+