Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியாளருக்கு ரோகித் கொடுத்த எச்சரிக்கை.. 3 கேட்சை விட்டதால் கடுப்பான கேப்டன்

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 10 போட்டியில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.

பாராட்டு

பாராட்டு

இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் சொந்த மண்ணில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை பாராட்டினார். கிஷனை எனக்கு நீண்ட காலமாக தெரியும், ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக விளையாடுகிறோம். அவரது திறமையை நன்கு அறிந்தவன்.

முக்கியமானவர்

முக்கியமானவர்

6 ஓவருக்கு பிறகு அவர், அவரது இன்னிங்சை கட்டமைத்த விதம், பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. ஜடேஜா எங்கள் அணிக்கு முக்கியமானவர். அவருடைய பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக நன்கு முதிர்ச்சி அடைந்துள்ளது. அதனை நாங்கள் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறோம். இனி அவரை முன்வரிசையில் அடிக்கடி பார்ப்பீர்கள்.

கடுப்பான ரோகித்

கடுப்பான ரோகித்

தொடர்ந்து கேட்ச்களை விடுவது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்குறோம். இதனை மாற்ற வேண்டும். ஃபில்டிங் பயிற்சியாளருக்கு நிறைய வேலை உள்ளது. அவர் தான் இதனை சரி செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவில் சிறந்த ஃபில்டிங் அணி தான் எங்களுக்கு தேவை.

Recommended Video

Rohit Sharma's Challenges as the India's Test captain | OneIndia Tamil
இஷான் கிஷன்

இஷான் கிஷன்

ஆட்டநாயகன் விருதை வென்ற இஷான் கிஷன் பேசும் போது, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நர்ன் நல்ல உத்வேகத்துடன் இல்லை. என் திறமை மீது கோலி, டிராவிட், ரோகித் ஆகியோர் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். என் திறமை மீது சந்தேகம் இல்லை என்று கூறியது எனக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளித்தது.

Story first published: Thursday, February 24, 2022, 23:53 [IST]
Other articles published on Feb 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+