Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் "பலே" கேப்டன்சி.. ரிஷப் பண்ட்டிற்கு முன் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங்கிற்கு அழைத்தது ஏன்?

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட்க்கு முன் தினேஷ் கார்த்திகை பேட்டிங் செய்ய ரோகித் சர்மா அழைத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக கருதப்படுகிறது.

91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடிய போது ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அப்போது 7 பந்துக்கு 15 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது .

தினேஷ் கார்த்திக் அதிரடி

தினேஷ் கார்த்திக் அதிரடி

அந்தக் கட்டத்தில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய களத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திகை பேட்டிங் செய்ய அழைத்தார். இது ரோகித் சர்மாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. காரணம் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்த நிலையில் ரிஷப் பண்ட்டுக்கு பதில் தினேஷ் கார்த்திக்கை பேட்டிங் செய்ய அழைத்தது ஏன் என்று ரோகித் சர்மா, விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசி அவர், தினேஷ் கார்த்திக் போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்தில் நேரத்தை செலவிட்டு இருக்கிறார்.

டேனியல் சாம்ஸ் காரணம்

டேனியல் சாம்ஸ் காரணம்

முதலில் ரிஷப் பண்டை பேட்டிங் செய்ய அழைக்கலாம் என்று தான் நினைத்தோம். ஆனால் கடைசி ஓவரில் டேனியல் சாம்ஸ் பந்து வீச உள்ளார் என தெரிந்தது. சாம்ஸ் ஆப் கட்டர் வகை பந்துகளை அதிகம் வீசக்கூடியவர். இதனால் தினேஷ் கார்த்திக் இந்த பந்துகளை அசாதாரணமாக எதிர்கொள்வார் என்று நினைத்தோம். எப்படியும் அவர்தான் பினிஷர் என்பதால் ஏழு பந்துகள் இருக்கும் போது அவர் வந்து விளையாடினால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்து இந்த முடிவை எடுத்தேன்.

இந்தியாவுக்கு சாதகம்

இந்தியாவுக்கு சாதகம்

அது எங்களுக்கு நன்மையை தந்திருக்கிறது. ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் என இருவரையும் இந்திய அணி சேர்த்ததற்கு கை மேல் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூட இதை தான் கூறியிருந்தார். இருவரையும் இந்தியா சேர்த்துக் கொள்வது சிறப்பாக அமையும் அவர் கூறியிருந்த நிலையில், இந்தியா நேற்று வெற்றி பெற்று இருக்கிறது.

Story first published: Saturday, September 24, 2022, 17:23 [IST]
Other articles published on Sep 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+