For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போ என்ன பண்ணுவீங்க.. சொல்லுங்க.. கோலிக்கு முறையான பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா.. பரபரப்பு

சென்னை: டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெற்று இருக்கும் மூத்த வீரர் ரோஹித் சர்மா தன்னை சிறந்த டெஸ்ட் பார்மெட் வீரர் என்று நிரூபித்து இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார்.

இரண்டாவது டெஸ்டில் ரோஹித் சர்மா எடுத்த 160+ ரன்கள் அதன்பின் மூன்றாவது டெஸ்டில் ரோஹித் சர்மா எடுத்த 60+ ரன்கள்தான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.

மற்ற பேட்ஸ்மேன்கள்

மற்ற பேட்ஸ்மேன்கள்

இரண்டாவது டெஸ்ட் மற்றும் மூன்றாவது டெஸ்ட் இரண்டும் பவுலிங் பிட்சில்தான் நடந்தது. இந்த பிட்சில் பேட்டிங் செய்ய கிட்டத்தட்ட எல்லா பேட்ஸ்மேன்களும் கடுமையாக திணறினார்கள். கோலி , பண்ட், ரூட், ஸ்டோக்ஸ், ரஹானே, புஜாரா என்று மூத்த வீரர்கள் எல்லோரும் இங்கு பேட்டிங் செய்ய கடுமையாக திணறினார்கள்.

திணறல்

திணறல்

ஆனால் ரோஹித் சர்மா மட்டுமே இங்கு அதிரடியாக பேட்டிங் செய்தார். ரோஹித் சர்மா மட்டுமே இரண்டு அணியிலும் நன்றாக பேட்டிங் செய்த வீரர் ஆவார். இரண்டு அணிக்கும் இடையில் இவர்தான் வேறுபாடாக இருந்தது.

எப்படி

எப்படி

முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பதால் இவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ரோஹித் சர்மா டெஸ்ட் பேட்ஸ்மேன் இல்லை என்று நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இவரை டெஸ்ட் அணியில் எடுக்கவே கூடாது என்றும் பலர் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை

கோரிக்கை

ஆனால் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் அதிரடியாக ஆடும் ஒரே பேட்ஸ்மேன் என்ற பெயரை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். தனது அதிரடி ஆட்டம் மூலம் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் தன்னுடைய இடத்தை உறுதியாக்கி உள்ளார். டெஸ்ட் அணியில் இனியும் கோலி இவரை புறக்கணிக்க முடியாது.

ஓப்பனர்

ஓப்பனர்

ரிட்டயர் ஆகும் வரை ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் இறங்குவார் என்கிறார்கள். ரோஹித் சர்மாவின் வருகை டெஸ்ட் அணிக்கு பெரிய பலம் கொடுத்துள்ளது. அதிலும் கடினமான ஸ்பின் பிட்சில் இவர் ஆடுவது இந்திய அணிக்கு சாதகமாகி உள்ளது.

Story first published: Saturday, February 27, 2021, 11:16 [IST]
Other articles published on Feb 27, 2021
English summary
Rohit Sharma proves himself as the best test batsman in Team India in a tricky conditions.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+