Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்சில் ஒன்னும் பூதம் இல்லை.. யுவராஜ் சிங்கிற்கு நெத்தியடி பதில் கொடுத்த ரோஹித்.. ஹிட்மேனின் ஹிட்!

சென்னை: இந்தியாவின் வெற்றியை குறைத்து மதிப்பிடுவது போல யுவராஜ் சிங் பேசியதற்கு தற்போது ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று சிறப்பாக பவுலிங் செய்த இந்திய அணி 3வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் இந்திய ஸ்பின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்.

இந்திய ஸ்பின் பவுலர்களை பலரும் இணையத்தில் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் ஸ்பின் பவுலர்களை மறைமுகமாக கிண்டல் செய்யும் விதமாக யுவராஜ் சிங் டிவிட் செய்து இருந்தார்.

எப்படி

அதில், இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாளில் முடிந்துவிட்டது. இது நல்ல டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் உள்ளது. ஹர்பஜன், அணில் கும்ப்ளே இந்த பிட்சில் பவுலிங் செய்திருந்தால் அவர்கள் 1000 அல்லது 800 விக்கெட்டுகளை எடுத்து இருப்பார்கள். இருந்தாலும் நன்றாக பவுலிங் செய்த அக்சர், அஸ்வின், இஷாந்த் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என்று யுவராஜ் டிவிட் செய்துள்ளார்.

பதிலடி

பதிலடி

இந்தியாவின் வெற்றியை குறைத்து மதிப்பிடுவது போல யுவராஜ் சிங் பேசியதற்கு தற்போது ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ரோஹித் சர்மா தனது பேச்சில், இந்திய அணியின் வெற்றிக்கு பிட்ச்தான் காரணம் என்று சொல்ல கூடாது. அதில் உண்மை இல்லை.

ஸ்விங்

ஸ்விங்

பந்து ஸ்விங் ஆகி விக்கெட் ஆகவில்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பந்து நேராக வந்த போதுதான் விக்கெட் ஆனார்கள். இதில் பிட்ச் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை.

கோபம்

கோபம்

ஒரு பேட்டிங் யூனிட்டாக இந்திய அணியும் சொதப்பி இருக்கிறது. நாங்களும் கூட நிறைய தவறுகளை களத்தில் செய்து இருக்கிறோம். அதனால்தான் நாங்களும் அவுட் ஆனோம். இதில் பிட்ச் எதுவும் செய்யவில்லை.

பலர் பதிலடி

பலர் பதிலடி

பிட்சில் பூதம் எல்லாம் இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த பிட்சில் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலையே நிலவியது. நாங்கள் இங்குதான் ஸ்கோர் செய்தோம். மிகவும் கவனமாக பேட்டிங் செய்தால், இங்கு ஆட முடியும், என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

தவறான கருத்து

தவறான கருத்து

யுவராஜ் சிங்கின் பிட்ச் புகாருக்கு பதிலடி கொடுப்பது போல இவர் பேசி இருக்கிறார். யுவராஜ் சிங் கூறிய கருத்து தற்கால இந்திய வீரர்கள் பலரை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இன்னும் பலர் யுவராஜ் சிங்கிற்கு பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Friday, February 26, 2021, 20:25 [IST]
Other articles published on Feb 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+