Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வியப்பை ஏற்படுத்தும் ரோகித் சர்மா.. ஆசிய கோப்பையில் இப்படி ஒரு கேப்டன்சி ரெக்கார்டா?? வெற்றி உறுதி!

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய கேப்டன்சிப் சவால் காத்துள்ளது.

Recommended Video

Asia Cup-ல் Ashwin-க்கு இடம் கிடைக்குமா? Playing 11-ல் குழப்பம் | Aanee's Appeal | *Cricket

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அமீரகம் சென்றடைந்தனர்.

 ரோகித் சர்மா கேப்டன்சி

ரோகித் சர்மா கேப்டன்சி

ரோகித் சர்மா கேப்டன்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்சியில் வெற்றிகள் தான் அதிகம் வந்துள்ளன. எனினும் இந்த தொடர் தான் அவர் எதிர்கொள்ளப்போகும் முதல் பெரிய தொடர் ஆகும். கோப்பையை வென்றுக் கொடுப்பேன் என்ற உறுதியுடன் கேப்டன்சி பொறுப்பேற்ற ரோகித் இதில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டும்.

இந்தியாவுக்கு கோப்பை

இந்தியாவுக்கு கோப்பை

ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா கேப்டன்சி செய்வது இது முதல்முறையல்ல. கடந்த 2018ம் ஆண்டு விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதால் ரோகித் சர்மா தான் கேப்டனாக செயல்பட்டார். அப்போது ரோகித்தின் தலைமையில் தான் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

 கேப்டன்சி ரெக்கார்ட்

கேப்டன்சி ரெக்கார்ட்

இதுவரை ரோகித் சர்மா 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுக்கொடுத்துள்ளார். இதே போல ஒருமுறை ஆசிய கோப்பை தொடர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் கேப்டனாக கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார். இதே போல நிடாஹஸ் கோப்பையிலும் சாம்பியன் பட்டம் பெற்றுத்தந்துள்ளார். இதனால் ஆசிய கோப்பையிலும் ரோகித்தின் அணி ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று துபாயில் நடைபெறவுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பையில் பெற்ற தோல்விக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்க தீவிரமாக தயாராகி வருகிறது.

Story first published: Wednesday, August 24, 2022, 13:45 [IST]
Other articles published on Aug 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+