உங்களுக்கு அசிங்கமா இல்லையா??... ரிஷப் பண்ட் ரசிகர்கள் செய்த விஷயம்.. ரோகித் மனைவி கொந்தளிப்பு!
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய பிறகு அவரின் ரசிகர்கள் செய்த ஒரு விஷயத்திற்காக கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
டெல்லிக்கு காரில் பயணம் செய்துக்கொண்டிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்- சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரவு முழுவதும் தனி நபராக காரை ஓட்டி வந்ததால், தூக்க கலக்கத்தில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதனால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் செயல்
விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்-க்கு தலை, கை, கால் மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அவர் உடல் முழுவதும் ரத்த காயங்களுடனும், சிராய்ப்புகளுடனும் தவிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ரித்திகா சாடல்
இந்நிலையில் இதற்காக ரசிகர்கள் மீது ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா கொந்தளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், படுகாயங்களுடன் நிற்கமுடியாமல் தவித்து வரும் ஒருவரின் புகைப்படத்தையும், வீடியோவையும் பகிர்ந்து வரும் உங்களுக்கு கேவலமாக இல்லையா??.. உங்களை நினைத்து அசிங்கப்படுகிறேன். அவர் எந்தவித முடிவையும் எடுக்க முடியாமல் சோர்வாக இருந்தார்.

யோசிக்க மாட்டீர்களா?
ரிஷப் பண்ட்-க்கும் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உள்ளனர். அவற்றினை பார்த்து அவர்கள் பதற்றமடைய மாட்டார்களா? குணமடைந்து வரும் வரை அந்த புகைப்படங்களை பார்க்கையில் வேதனையாக இருக்காதா? ஒரு விஷயத்தின் தன்மை கூட புரியாமல் நடந்துக்கொண்டிருக்கிறீர்கள் என ரசிகர்களிடம் கடும் அதிருப்தியுடன் கேட்டுள்ளார்.

எப்போது குணமாகும்
இதுஒருபுறம் இருக்க ரிஷப் பண்ட்-ன் மருத்துவ அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், பண்ட்-க்கு எலும்பு முறிவு போன்று எந்தவித பிரச்சினையும் இல்லையென்றும், தசை கிழிவு, சீராய்ப்புகள் தான் அதிகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் முழுவதுமாக குணமடைய குறைந்தது 4 - 5 மாதங்கள் வரை ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications