Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் பண்ணது சான்சே இல்லை..!! கோலி கூட இப்படி தியாகம் பண்ணல..!! பாராட்டு மழையில் ஹிட்மேன்

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்த காரியம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடரை ஏற்கனவே வென்றதால் இந்திய அணியில் ரோகித் சர்மா 4 மாற்றங்களை செய்தார். அத்துடன் நிற்காமல் அனைவருக்காகவும் ரோகித் சர்மா ஒரு காரியம் செய்தார்.

இதனை ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,.

அணியில் மாற்றம்

அணியில் மாற்றம்

விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், புவனேஸ்வர் குமார், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார். மேலும் ரோகித் பேட்டிங் வரிசையிலும் சில மாற்றங்கள் கொண்டு வந்தார்.

தியாகம்

தியாகம்

தொடக்க வீரரான ரோகித் சர்மா, இளைஞர்களுக்கு வழி விடும் வகையில், தனது இடத்தை தியாகம் செய்தார். ருத்துராஜ், இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 4வது வீரராக களமிறங்கினார்.

பாராட்டு

பாராட்டு

எந்த ஒரு கேப்டனும் மற்றவர்களுக்காக தங்களது இடத்தை தியாகம் செய்ய மாட்டனர் என்றும், ரோகித்தின் இந்த செயல் அவர் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துவிட்டதாக பலரும் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

எனினும் ரோகித் சர்மா செய்த இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இளைஞர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்தாலும் ருத்துராஜ் 4 ரன்களிலும், இஷான் கிஷன் 34 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களும் மட்டுமே எடுத்தனர். ஆனால் இது போன்ற வாய்ப்பு இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.

Story first published: Sunday, February 20, 2022, 20:24 [IST]
Other articles published on Feb 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+