Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும் போலயே..ரோகித் சர்மா வார்த்தையை கவனச்சீங்களா?

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்க உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விவகாரம் குறித்து பேசினார்.

இந்திய அணி தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றினாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தகுதி பெற இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

இந்தியா தோற்றால் கூட, இலங்கை அணி நியூசிலாந்தை அவர்களுடைய சொந்த மண்ணில் 2க்கு0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும். இல்லையெனில் இந்தியா தான் இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்த நிலையில் தொடக்க வீரர் யார் என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.

ராகுல் vs சுப்மன் கில்

ராகுல் vs சுப்மன் கில்

ஏனென்றால் திங்கட்கிழமை நடைபெற்ற வலைப்பயிற்சியில் சுப்மன் கில்லும் ரோகித் சர்மாவும் பங்கேற்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வலை பயிற்சியில் கே எல் ராகுலும் சுப்மன் கில்லும் ஒரே நேரத்தில் வலைப் பயிற்சியில் விளையாடினர். கே எல் ராகுலின் சராசரி 33.4 என்ற கணக்கில் உள்ளது.

ஆதரவு

ஆதரவு

ராகுல் கடைசியாக விளையாடிய 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 25 ரன்களை கூட எட்ட முடியாமல் தவித்த வருகிறார்.இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, கே எல் ராகுல் விவகாரம் குறித்து நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். வீரர்கள் நெருக்கடியான காலத்தை கடக்கும்போது அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.கே எல் ராகுல் போன்ற திறமையான வீரர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

அறிவிப்பது இல்லை

அறிவிப்பது இல்லை

கே எல் ராகுல் மீண்டும் பார்ம்க்கு திரும்ப நிறைய வாய்ப்பு கொடுக்க வேண்டும். துணை கேப்டனாக இருப்பதும் இல்லாததும் எதையுமே உணர்த்துவது கிடையாது. துணை கேப்டனாக அவர் நீக்கப்பட்டதில் எந்த உள் நோக்கமும் கிடையாது. சுப்மன் கில்லும் கே எல் ராகுலும் எப்போதும் போல் பயிற்சி செய்து வருகிறார்கள்.எப்போதும் நான் பிளேயிங் லெவன் குறித்து அறிவிப்பது இல்லை.

மீண்டும் ராகுல்

மீண்டும் ராகுல்

காரணம் கடைசி நேரத்தில் கூட வீரர்களுக்கு காயம் ஏற்படலாம். இதனால் அந்த தவறை நாங்கள் செய்வதில்லை. டாஸ் போடுவதற்கு முன்பு தான் யார் இடம் பெறுகிறார்கள் என்று சொல்ல முடியும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் இந்த பேட்டியின் மூலம் கேஎல் ராகுலுக்கு தான் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதிலும் கே எல் ராகுல் சொதப்பினால் நிச்சயம் அவரை அணியில் வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை.

Story first published: Tuesday, February 28, 2023, 15:27 [IST]
Other articles published on Feb 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+