Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலில் சல்யூட்.. பிறகு ரிவீட்… தீபக் சாஹருக்கு ரோகித் கொடுத்த டிரிட்மெண்ட்..

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தனது இரு முகத்தை காட்டினார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் சிறப்பாக பேட் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார்.

இருப்பினும் ரிஷப் பண்ட் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஹீரோ

ஹீரோ

இதனால் ராக்கெட் வேகத்தில் சென்ற இந்திய அணியின் ஸ்கோர், நமது ஊர் டவுன் பஸ் வேகத்துக்கு குறைந்தது. இந்த நிலையில், கடைசி கட்டத்தில் இறங்கிய தீபக் சாஹர் 8 பந்துகளில் 21 ரன்கள் விளாசினார். அப்போது ஆடம் மிலின் பந்தில் ஸ்ட்ரைட்டாக தீபக் சாஹர் சிக்சர் அடிக்க, பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா சலியூட் அடித்தார்.

வில்லன்

வில்லன்

முதல் இன்னிங்சில் ஹீரோவாக இருந்த தீபக் சாஹர், இரண்டாவது இன்னிங்சில் வில்லனாக மாறினார். ஆம் பவர்பிளேவின் 2வது ஓவரை வீசிய தீபக் சாஹர் 16 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதில் கடைசி பந்தில் குப்தில் அடித்த பந்தை தீபக் சாஹர் லட்டு போல் வந்த கேட்சை தவறவிட்டார்.இதனால் கடுப்பான ரோஹித் சர்மா தீபக் சாஹரை கடுமையாக திட்டினார். இதனால் தீபக் சாஹருக்கு வெகு நேரமாகியும் ரோஹித் சர்மா ஓவரே கொடுக்கவில்லை.

அறிவுரை

அறிவுரை

ஹர்சல் பந்துவீசிய போது திபக் சாஹரை அழைத்த ரோகித் சர்மா ஏதோ அறிவுரை கூறினார். இப்படி தான் பந்துவீசனும், பார்த்துக்கோ என்று கூறியது போல் அந்த நிகழ்வு அமைந்தது. 16 ரன்களில் தீபக் சாஹர் தவறவிட்ட கேட்ச்சால் குப்தில் 51 ரன்கள் விளாசினார்.

இருமுகம்

இருமுகம்

தீபக் சாஹருக்கு முதலில் சலியூட் அடித்த ரோகித் சர்மா, பிறகு ரிவீட் அடித்ததாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.. தீபக் சாஹரின் மோசமான பந்துவீச்சால் வெங்கடேண் ஐயருக்கு பந்துவீச ரோகித் சர்மா வாய்ப்பளித்தார்.

Story first published: Sunday, November 21, 2021, 22:52 [IST]
Other articles published on Nov 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+