ரிஷப் பண்ட் பிறந்தநாளைக்கு ரோகித் கொடுத்த பரிசு.. திருப்புமுனையாக அமையுமா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தூர் : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால், ரிஷப் பண்ட்க்கு ரோகித் ஒரு பிறந்தநதாள் பரிசை கொடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில், கடைசி டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டை இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறக்க ரோகித் சர்மா வாய்ப்பு கொடுத்துள்ளார்.

எங்கு இடம்
ஏற்கனவே டி20 உலககோப்பை தொடரில் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட்க்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், பினிஷர் ரோலில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், ரிஷப் பண்ட்க்கு தொடக்க வீரர் என்ற இடம் மட்டும் உள்ளது, ஆனால், அங்கு கேஎல் ராகுல் கடந்த சில போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடைசி வாய்ப்பு
இந்த நிலையில், ரிஷப் பண்ட் இன்று மட்டும் தவிர்க்க முடியாத படி ஒரு இன்னிங்சை வெளிப்படுத்தினால் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்பபு இருக்கிறது. இதனால் ரிஷப் பண்ட்க்கு இது கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஒரு வேலை ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இடம் கிடைக்கவில்லை என்றாலும், நடுவரிசையில் இடம் கொடுக்கலாம்.

பர்த்டே பார்டி
ஹர்திக் பாண்டியாவை 3வது பந்துவீச்சாளராக பயன்படுத்தினால், ரிஷப் பண்ட்டை நடுவரிசையில் ஹர்திக் பாண்டியாவுக்கு முன் 5வது வீரராக களமிறக்கலாம். அதற்கு ரிஷப் பண்ட் இன்று ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். இன்று பண்ட்க்கு பிறந்தநாள் என்பதால், ரசிகர்களுக்கு அவர் பர்த்டே பார்டி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்புமுனை
இதனால் ரிஷப் பண்ட்க்கு இன்றைய நாள், அவருடைய வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கில்கிறிஸ்ட், மேத்தீவ் ஹைடன் ஆகியோர், ரிஷப் பண்டை இந்திய அணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications